உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் கட்சிப் பதவியை விட்டுத்தர வேண்டும் – அமைச்சர்

ஒருவருக்கே பதவிகள் வழங்க முடியாது என மதுரை திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு. மதுரை திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,  கூட்டணி கட்சியுடன் சுமூகமாக தேர்தலை சந்திக்க வேண்டும், வெற்றி முக்கியம் என்பதை இலக்காக நினைத்து பணியாற்ற வேண்டும். ஒருவருக்கே பதவிகள் வழங்க முடியாது. நான் பெற்று, வளர்த்த பிள்ளையாக நினைத்த தகவல் தொழில்நுட்ப அணியை துறந்தேன். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் கட்சிப் … Read more

மகனுக்கு பயிற்சியளிக்கும் ரொனால்டோ!

தனது மனுக்கும் கால்பந்து பயிற்சி அளித்து வரும் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக வலம் வருபவர் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 36 வயதான இவர் கால்பந்து விளையாட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். கால்பந்தின் சிறந்த விருதான பலோன் டி’ஆர் ( தங்க கால்பந்து கோப்பை) விருதை 5 முறை வென்றுள்ளார். போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனாகவும், மான்செஸ்டர் யுனைடட் அணியின் முன்னணி வீரராகவும் … Read more

தீ விபத்து – ஜெய்ப்பூரில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு!

ஜெய்ப்பூரில் அருகே எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு.  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள டர்பெண்டைன் எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தொழிற்சாலை ஜெய்ப்பூரில் உள்ள ஜாம்வா ராம்கரில் அமைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அளித்த சிஓ சிவகுமார், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பெயிண்ட் பொருட்கள் பேக்கிங் செய்யும் பிரிவில் தீ … Read more

#Election2022: திமுக – காங்கிரஸ் இடையே இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இட பங்கீடு தொடர்பாக திமுக, காங்கிரஸ் இடையே இன்று மாலை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோருடன் உள்ளாட்சி தேர்தலில் இடங்களை பங்கீடு செய்வது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மண்டலத்திற்கு குறைந்தபட்சம் ஒரு இடமாக கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்று மார்சிஸ்ட் … Read more

மூன்றாவது அலையை வெல்ல மக்கள் ஒத்துழைப்பு தேவை – மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர்!

புதிய வகை கொரோனா பற்றிய கவலை தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை வெல்வதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. புதிய வகை கொரோனா பற்றி தேவையற்ற பீதி வேண்டாம். மூன்றாவது அலையில் முதியவர்கள் தான் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டு, உயிரிழந்துள்ளனர். அடுத்த சில வாரங்களில் கொரோனா தொற்று … Read more

பாஜகவின் சீரழிவு அரசியலை அம்பலப்படுத்துங்கள் – தொண்டர்களுக்கு திமுக தலைவர் மடல்!

அ.தி.மு.க. தலைமையினால், கடந்த 10 ஆண்டுகளில் பட்ட பாட்டை நினைவுபடுத்துங்கள் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மடல். தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் பிப்ரவரி 19-ஆம் தெத்து ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் கடந்த 28-ஆம் தேதி … Read more

#BREAKING: பட்டாசு ஆலை வெடிவிபத்து – நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்!

விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு, முதலமைச்சர் ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை அறிவித்தார். விருதுநகர் அருகே நாட்டார் மங்கலம் பகுதியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான பொம்மி பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. பட்டாசு தயாரிக்கும் பணிகள் முடிந்த பிறகு, மீதம் உள்ள கழிவுகளை எரிக்கும் பணியில் ஆறுமுகம், தெய்வேந்திரன் குபேந்திரன் ஆகிய 3 பேர் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, திடீரென உராய்வினால் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், இருவர் மருத்துவமனையில் … Read more

#ELECTION2022: அதிமுக-பாஜக இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பேசப்பட்டது என்ன?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர்வோம் என அதிமுக மற்றும் பாஜக அறிவிப்பு. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி, இடப்பங்கீடு குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். இந்த … Read more

2.1 கோடி மரங்களை நட்டு சாதனை படைத்த காவேரி கூக்குரல் இயக்கம்!

1,25,000 விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறியுள்ளனர் என்று காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தகவல். கொரோனா பெருந்தொற்று காலத்திலும் காவேரி கூக்குரல் இயக்கம் 2.1 கோடி மரங்களை விவசாயிகள் மூலம் நடவு செய்து சாதனை படைத்துள்ளது. அத்துடன் சுமார் 1,25,000 விவசாயிகளை மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாற்றி உள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (ஜனவரி 29) நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில … Read more

தேசத்துரோகக் குற்றமிழைத்த மோடி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் – திருமாவளவன் எம்.பி

பெகாசஸ் உளவு விவகாரத்தில் தேசத்துரோகக் குற்றமிழைத்த மோடி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என தொல்.திருமாவளவன் எம்.பி அறிக்கை. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் நாட்டிடமிருந்து பெகாசஸ் உளவுச் செயலியை மோடி அரசு வாங்கியது உண்மை என்பதை ‘நியு யார்க் டைம்ஸ்’ நாளேடு ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது. உளவுச் செயலியை வாங்கவில்லை என்று நாடாளுமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பொய்யுரைத்த மோடி அரசு தேசத்துரோகக் குற்றம் இழைத்துள்ளது. இதற்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவியிலிருந்து … Read more