ஹோட்டல் ஊழியர் அறையில் திடீரென புகுந்த சிறுத்தையால் பரபரப்பு.!

Leopard

ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டல் ஊழியர் ஒருவரின் அறைக்குள் திடீரென சிறுத்தை புகுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அறைக்குள் சிறுத்தை இருப்பதை கண்ட அந்த ஹோட்டல் ஊழியர், சாதுரியமாக கதவை மூடி வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார் ஹோட்டல் நிர்வாகத்திடம் இருந்து தகவல் கிடைத்ததும், வனத்துறை மற்றும் ஜெய்ப்பூர் மிருகக்காட்சிசாலையின் குழுவினர் உடனடியாக அந்த இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி சிறுத்தையை வெற்றிகரமாக பிடித்து அதற்கு முதலுதவி அளித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்டுள்ளனர். அரசு பங்களாவை … Read more

ஜெய்ப்பூரில் இன்று இந்திய காவல்துறை டிஜிபிக்கள் மாநாடு.! பிரதமர் மோடி – அமித் ஷா பங்கேற்பு…

DGPs Conference

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் இன்டர்நேஷனல் சென்டரில் 2023 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய இயக்குநர் ஜெனரல்கள், இன்ஸ்பெக்டர் ஜெனரல்கள் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இன்று ஜெய்ப்பூர் வருகிறார்கள். இன்று முதல் ஜனவரி 5 முதல் ஜனவரி 7 வரை நடைபெறும் இந்த மூன்று நாள் மாநாட்டில், சைபர் கிரைம், காவல்துறையில் தொழில்நுட்பம், பயங்கரவாத எதிர்ப்பு சவால்கள், இடதுசாரி தீவிரவாதம் மற்றும் … Read more

கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்த ஜெய்ப்பூர் இளம் பெண்.! அந்த சம்பவத்திற்கு காரணம் இதுதான்…

திருமண பந்தத்தில் சின்ன சின்ன விஷயங்களில் கூட கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படுகிறது. அதனால் நான் கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டேன். – பூஜா சிங், ஜெய்ப்பூர்.  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த இளம் பெண் பூஜா சிங் இம்மாதம் கடவுள் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டார். இந்து முறைப்படி திருமணம் செய்யும் போது எந்தெந்த சடங்குகள் செய்வார்களோ அது அத்தனையும் செய்யப்பட்டது. இந்த திருமணம் பற்றி பூஜா சிங் கூறுகையில் , திருமண பந்தத்தில் … Read more

மேயர் பதவியில் இருந்து பாஜக கவுன்சிலர் டிஸ்மிஸ் !

ஜெய்ப்பூர் மேயர் பதவியில் இருந்து பாஜக கவுன்சிலரை ராஜஸ்தான் அரசு டிஸ்மிஸ் செய்தது. முன்னாள் கமிஷனர் யக்யா மித்ரா சிங் தியோவை தாக்கியதாக வழக்கில் விசாரணையின் போது குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷனின் மேயரான பாஜக கவுன்சிலர் சோமியா குர்ஜரை ராஜஸ்தான் அரசு பதவி நீக்கம் செய்துள்ளது. மேலும் குர்ஜார் ஆறு ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. துணை மேயர் புனித் கர்னாவத், அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக கடுமையான … Read more

ஒவ்வொரு மாநில மொழியும் இந்தியாவின் அடையாளமே – பிரதமர் மோடி

மொழி அடிப்படையில் சர்ச்சையைக் கிளப்ப முயற்சி நடப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு. பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில மொழியும் இந்தியாவின் அடையாளம் தான். மாநில மொழிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கடந்த சில நாட்களாக மொழி அடிப்படையில் சர்ச்சையை கிளப்ப முயற்சி நடக்கிறது என்றும் இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை பாஜக ஒவ்வொரு பிராந்திய மொழிகளிலும் காண்கிறது எனவும் கூறினார். புதிய கல்வி கொள்கையில் ஒவ்வொரு பிராந்திய … Read more

குற்றவாளி கைது.. ஆதாரத்துடன் தப்பி ஓடிய குரங்கு.. ராஜஸ்தானில் அரங்கேறிய வினோதம்!

ராஜஸ்தானில் கொலை வழக்கில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை குரங்கு திருடி சென்ற வினோதம் சம்பவம் அரங்கேறியுள்ளது. பொதுவாக, ஒரு குற்றத்தைச் செய்து பின்னர் ஆதாரங்களை அழிப்பவர்கள் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக கருதப்படுகிறார்கள். ஆனால் ஒரு மிருகம் மனிதன் செய்த குற்றத்திற்கான ஆதாரத்தை அழித்துவிட்டால் என்ன செய்வது. அப்படியொரு சம்பவம் தான் அரங்கேறியுள்ளது. அதாவது, ராஜஸ்தானில் ஒரு குரங்கு கொலை வழக்கில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களுடன் தப்பி ஓடியுள்ளது. இது காவல்துறைக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. அந்த ஆதாரத்தில் கொலை ஆயுதம் … Read more

தீ விபத்து – ஜெய்ப்பூரில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு!

ஜெய்ப்பூரில் அருகே எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு.  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள டர்பெண்டைன் எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தொழிற்சாலை ஜெய்ப்பூரில் உள்ள ஜாம்வா ராம்கரில் அமைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அளித்த சிஓ சிவகுமார், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பெயிண்ட் பொருட்கள் பேக்கிங் செய்யும் பிரிவில் தீ … Read more

செப்டம்பர் 3ம் தேதி “Money Heist” சீசன் 5 பார்க்க ஊழியர்களுக்கு லீவு அளித்த ஜெய்ப்பூர் நிறுவனம்!

செப்டம்பர் 3ம் தேதி Money Heist பார்க்க ஊழியர்களுக்கு நெட்ஃபிக்ஸ் அண்ட் சில் என்ற விடுமுறையை அளித்த ஜெய்ப்பூர் நிறுவனம். செப்டம்பர் 3-ஆம் தேதி, நாளை மறுநாள் நெட்ஃபிக்ஸில் பிரபல வெப் சீரியஸான மணி ஹெய்ஸ்டின் சீசன் 5 வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த தொடரை காண்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள Verve logic என்ற தனியார் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், உலகளவில் புகழ்பெற்ற ஸ்பானிஷ் சீரியஸான லா … Read more

மது குடிப்பதற்காக 2 வயது குழந்தையை விற்ற தந்தை..!

ஜெய்ப்பூரில் மது அருந்துவதற்காக தனது 2 வயது மகளை விற்பனை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூரில் வசிக்கும் ரமேஷ் என்பவர் மதுவிற்கு அடிமையாகி தனது 2 வயது இளைய குழந்தையை விற்றுள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன. கடந்த மாதம் இவருக்கும் இவரது மனைவிக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வருவதை நிறுத்த கூறிய மனைவியை உடல்ரீதியாக தாக்கி வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். பின்னர், ரமேஷ் தனது 2 வயது இளைய … Read more

ஜெய்ப்பூரில் 100 ரூபாயை தாண்டியது பெட்ரோல் விலை..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.100 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி,தினமும் பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், இன்று (27.05.2021) வியாழக்கிழமை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை 16 பைசா உயர்ந்து ரூ.100.05க்கும், ஒரு லிட்டா் ரூ.93.36 க்கும் விற்பனையாகி … Read more