#Breaking:சற்று குறைந்த கொரோனா!ஆனால்,மக்களே கவனம்…ஒரே நாளில் 959 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,09,918 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 959 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,13,02,440 ஆக உள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 2,34,281 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 2,09,918 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 24,300 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,13,02,440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 959 … Read more

பிக்பாஸ் 15:ரூ.40 லட்சம் பரிசுத் தொகையுடன் வெற்றியாளர் பட்டத்தை தட்டிச் சென்றவர் இவர்தான்!

பிரபல ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 15’ நிகழ்ச்சியில் பிரதிக் செஹாஜ்பாலை தோற்கடித்த டிவி நடிகை தேஜஸ்வி பிரகாஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களை அதிகம் கவர்ந்த பிரபல ரியாலிட்டி ஷோவான “பிக் பாஸ்” சீசன் 15 இன் வெற்றியாளர் பட்டத்தை தொலைக்காட்சி நட்சத்திரமான தேஜஸ்வி பிரகாஷ்,நடிகரும்-மாடலுமான பிரதிக் செஹாஜ்பாலை வீழ்த்தி தட்டிச் சென்றுள்ளார்.அதன்படி,பிக் பாஸ் சீசன் 15 நிகழ்ச்சி தொகுப்பாளரான சூப்பர் ஸ்டார் சல்மான் கான்,தேஜஸ்வி பிரகாஷ் வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதனையடுத்து,தேஜஸ்விக்கு ரூ.40 லட்சம் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட அதிமுக தலைமை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள்,490 பேரூராட்சிகள் என,649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது.இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 22 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதன்காரணமாக, அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து … Read more

இன்று தொடங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்!

டெல்லி:2022-23 நிதி ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது. 2022-23 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.அதன்படி,நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி இன்று (ஜன. 31) தொடங்கி பிப். 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அந்த  வகையில்,தொடக்க நாளான இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.அவரின் உரையில்,கடந்த ஆண்டில் மத்திய … Read more

உங்க வீட்ல ஊசல் கடிகாரம் இருக்கா? அப்போ இதெல்லாம் நடக்கும்..!

ஆரோக்கியமான சூழலைக் கொண்டு வர வீட்டில் எந்த கடிகாரத்தை வைக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வீட்டின் சுவரில் ஊசல் கடிகாரம் வைப்பது மிகவும் நன்மை தரும். சுவரில் ஊசல் கடிகாரத்தை வைப்பதன் மூலம், நேரம் நன்றாக இருக்கும் மற்றும் வாழ்க்கையில் இருந்து பிரச்சனைகள் விலகிவிடும். அதிலும் குறிப்பாக ஊசல் கடிகாரத்தை வீட்டின் ஓவிய அறையில் வைக்க வேண்டும். இதுபோன்று வைப்பதன் மூலமாக கடிகாரத்தின் நன்மையை அதிகமாக பெற முடியும். மேலும், வட்டம், சதுரம், ஓவல் … Read more

சென்னை மக்களுக்கு குட்நியூஸ்…நாளை முதல் அனுமதி – வெளியான முக்கிய அறிவிப்பு!

சென்னை:நாளை (பிப்ரவரி 1 ஆம் தேதி) முதல் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள கடற்கரைக்கு செல்ல நாளை (பிப்ரவரி 1 ஆம் தேதி) முதல் பொதுமக்களுக்கு அனுமதி என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.அதன்படி, மெரினா,பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளுக்குச் செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு,நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்டதன் காரணமாக,தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் போன்றவை … Read more

பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமில்லை – இன்றைய நிலவரம் இதோ!

சென்னை:88-வது நாளாக சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. ஆனால்,கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து வரும் நிலையில்,88-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும், அதைப்போல், … Read more

இன்றைய (31.01.2022) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்: இன்று உங்களுக்கு பாதுகாப்பின்மை உணர்வு அதிகரித்து காணப்படும். உத்தியோக வேலை உங்களுக்கு சாதகமாக இருக்காது. உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக இருக்கும். கண்களில் எரிச்சல் ஏற்படும். ரிஷபம்: இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மிதுனம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோக வேலையை … Read more

5 மணி நேரமாக நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டம் – சாம்பியன் பட்டத்தை வென்ற நடால்!

உலக டென்னிஸ் தரவரிசையில் 5ம் நிலை வீரராக ரபேல் நடால் 21-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். ஸ்பெயினின் ரஃபேல் நடால் அரையிறுதியில் இத்தாலியின் மேட்டியோ பெரட்டினியை எதிர்கொண்டார். 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான நடால், மேட்டியோ பெரட்டினியைத் தோற்கடித்து ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு கடந்த வெள்ளிக்கிழமை நுழைந்தார். இதில் நடால் 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். நடால் இரண்டு மணி நேரம் 55 நிமிடங்களில் … Read more

தமிழ்நாட்டில் மேலும் 22,238 பேருக்கு கொரோனா..38 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு, இன்று ஒரே நாளில் 22,238 பேருக்கு தொற்று உறுதி. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 22,238 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்தம் கொரோனா பாதிப்பு 33,25,940 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 37,544 ஆக உள்ளது. அதுமட்டுமில்லாமல், இன்று ஒரேநாளில் 26,624 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா … Read more