#Breaking:இனி நெல் கொள்முதல் நிலையங்களிலே இணைய வழி பதிவு – நுகர்பொருள் வாணிபக் கழகம் திடீர் அறிவிப்பு

விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய நெல் கொள்முதல் நிலையங்களிலே இணைய வழி பதிவு செய்யப்படும் என்று நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய நெல் கொள்முதல் நிலையங்களிலே இணைய வழி பதிவு செய்யப்படும் என்று தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி,விஏஓ வழங்கும் அடங்கல் ஆவணம்,ஆதார் நகல் உள்ளிட்ட ஆவணங்களை விவசாயிகள் சமர்பித்தால் இணைய வழியில் பதிவேற்றம் செய்து டோக்கன் வழங்கப்படும் எனவும் நுகர்பொருள் வாணிபக் கழகம் … Read more

“இவர்கள் உங்களுள் ஒருவர்;வெற்றி பெறச் செய்யுங்கள்” – 6 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ம.நீ.ம.தலைவர் கமல்ஹாசன்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களின் 6-ஆவது பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து,தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில்,மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 5-வது பட்டியல் வரை கமல்ஹாசன் அவர்கள் முன்னதாக வெளியிட்டிருந்தார். இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் … Read more

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி.எஸ்.சிங்காரவடிவேல்!

தஞ்சை:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. எஸ்.சிங்காரவடிவேல் இன்று காலமானார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட கொரோனா பரவல்,தற்போது குறைந்து வருகின்றது.இதற்கிடையில்,அரசியல்,சினிமா பிரபலங்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அந்த வகையில்,கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி எஸ்.சிங்காரவடிவேல் அவர்கள்,தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில்,அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து,முன்னாள் எம்.பி எஸ்.சிங்காரவடிவேல் அவர்களின் மறைவுக்கு … Read more

#BUDGET2022: குடியரசு தலைவர் உரையில் திருக்குறள்! நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது!

2022-23-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் உரையாற்றி வருகிறார். நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவது இது 5வது முறையாகும். நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையில், 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட நிலையில், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தோருக்கு வீரவணக்கம் செலுத்துவதாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து உரையாற்றிய குடியரசு தலைவர், … Read more

“முதல்வரே…இதனை பிரதமரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்” – ஓபிஎஸ் வலியுறுத்தல்!

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பினை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையினை எதிர்த்து திமுக அரசு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தல். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கைக்கு கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்றும்,இது மட்டுமல்லாமல் இதனை பிரதமர் மற்றும் மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மத்திய … Read more

அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயார் – பிரதமர் மோடி

நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத்தொடரில் நிறைய முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளன என்று பிரதமர் மோடி தகவல். 2022-23 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி இன்று தொடங்கி பிப். 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடக்க நாளான இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு … Read more

திமுகவின் நிலை என்ன? பாஜகவுடன் தொடர் இழுபறி – இன்று வெளியாகும் அதிமுகவின் 2ம் கட்ட பட்டியல்?

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான இடப்பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில், இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என தகவல். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கூட்டணி, இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக ஈடுபட்டு வருகிறது. ஒருபுறம் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கும் பணி தீவிரமடைந்துள்ளன. சென்னை மாநகராட்சியை பொறுத்தளவில் 200 வார்டுகள் உள்ள நிலையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, மதிமுக 2, மனிதநேய … Read more

தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளராக ரமேஷ் சென்னிதலா நியமனம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளராக ரமேஷ் சென்னிதலா நியமனம். தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழக அரசு கட்சிகள் கூட்டணி, இடப்பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல் என தேர்தல் பணியில் தீவிரம்காட்டி வருகிறது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளராக கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார் என்று வேணுகோபால் … Read more

தேசிய உயர் கல்வித் தகுதிக்கான வரைவு அறிக்கை வெளியீடு- பல்கலைக்கழக மானியக் குழு!

புதிய  கல்விக் கொள்கை அடிப்படையில் தேசிய கல்வி தகுதிக்கான புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டது பல்கலைக்கழக மானியக் குழு. தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் உயர் கல்வியுடன் தொழிற்கல்வியை இணைத்து, மாணவர்கள் பயில்வதற்கான வழிமுறையுடன் புதிய வரைவு அறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை கல்வியாளா்கள், பேராசிரியா்கள் பிப்ரவரி 13-ஆம் தேதிக்குள் idpnep2020@gmail-க்கு அனுப்ப வேண்டும் என்றும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கையில், ஒவ்வொரு உயா்கல்வி நிறுவனமும் தங்களின் வளா்ச்சி மற்றும் இலக்கை … Read more

#Breaking:தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் – தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை!

தஞ்சை:பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணை தொடங்கியது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். மேலும்,விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி,கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில் 19 ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து,தஞ்சாவூரில் தங்கி படித்து வந்த அரியலூரை சார்ந்த பிளஸ் டூ மாணவி தற்கொலை … Read more