#BREAKING: ராணிப்பேட்டை – அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

ராணிப்பேட்டை மாவட்டதிலுள்ள 8 பேரூராட்களில் போடியிடும் வேட்பாளர்கள் பெயரை வெளியிட்டது அதிமுக. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 8 பேரூராட்சிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக, இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என கூறப்பட்ட நிலையில், … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட அதிமுக தலைமை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள்,490 பேரூராட்சிகள் என,649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது.இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 22 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதன்காரணமாக, அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் 3வது பட்டியலை மக்கள் வெளியிட்டார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன். இதுகுறித்து தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகப் போட்டியிட இருக்கும் வேட்பாளர்களின் மூன்றாவது பட்டியலை மகிழ்ச்சியுடன் வெளியிடுகிறேன். நேர்மையும், திறமையும், தூய்மையும் கொண்ட இவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். சென்னை, தாம்பரம், மதுரை மாநகராட்சிகளுக்கான வேட்பாளர்களும் ஓசூர், … Read more

உள்ளாட்சி தேர்தல் – இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக!

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்தது. காஞ்சிபுரம் 11, செங்கல்பட்டு 14, ராணிப்பேட்டை … Read more

#BREAKING: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய … Read more

#ElectionBreaking: புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.!

புதுச்சேரி மாநிலத்தில் 12 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் – திமுக இடையே தொகுதி பங்கீடு குறித்த  ஒப்பந்தம் கடந்த 11ம் தேதி உடன்பாடு கையெழுத்தானது. புதுச்சேரியை பொறுத்தளவில் காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸுக்கு 15, திமுக 13, சிபிஐ 1, விசிக 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுதாகிருந்தது. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 12 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. … Read more