அரசியல்வாதிகளிடம் கூறி பயனில்லாத காரியத்தை சில மணி நேரங்களிலையே செய்த சோனு சூட்.! நன்றியை தெரிவிக்கும் ஊர் மக்கள்.!

ஜான்சி என்ற கிராமத்திற்கு தண்ணீர் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் சோனு சூட். சினிமாவில் வில்லனாக நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் மக்கள் மனதில் ஹீரோவாக திகழ்பவர் சோனு சூட் .கொரோனா சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை தனது சொந்த செலவில் செய்து உதவியதுடன், ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு செல்லவும் உதவினார்.அதனுடன் வேலையில்லா பெண் ஒருவருக்கு வேலை , மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்,விவசாயி ஒருவருக்கு டிராக்டர் , மூன்று குழந்தைகளை தத்தெடுத்தது, மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் உள்ளிட்ட … Read more

திமுக எத்தனை இடங்களில் போட்டி? கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? – தொகுதி பங்கீடு குறித்த சுவாரஸ்ய தகவல்.!

வரும் சட்டமன்ற தேர்தலில் 178 இடங்களில் திமுக நேரடியாக போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பிரதான கட்சியான அதிமுக, திமுக தங்களது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்ய தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி ஒருபக்கம் அதிமுக கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு உறுதி செய்து வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாமாவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. மறுபுறம் திமுக … Read more

மிரட்டலாக வெளியான “மிருகா ” படத்தின் டிரைலர்…! வெளியிட்ட அசுரன் தனுஷ்..!

ஸ்ரீகாந்த் மற்றும் ராய் லட்சுமி நடித்துள்ள மிருகா டிரைலரை நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இயக்குனர் ஜே.பார்த்திபன் இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் ராய் லட்சுமி நடித்துள்ள திரைப்படம் மிருகா. இந்த படத்தில் தேவ் கில், நைரா, வைசனவி, அரோஹி & பிளாக் பாண்டி போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அருல்டேவ் இசையமைத்துள்ளார். ஜாகுவார் ஸ்டுடியோக்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பி.வினோத் ஜெயின் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த … Read more

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த சலார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் சலார் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  கேஜிஎஃப் பட இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில்நடிகர் பிரபாஸ் நடித்து வரும் திரைப்படம் சலார். இந்த படத்தினையும் கேஜிஎஃப் படத்தினை தயாரித்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம், இந்த … Read more

நெல்லையப்பர் கோவிலில் பரிவட்டம் கட்டி சாமி தரிசனம் செய்த ராகுல் காந்தி.!

தேர்தல் பரப்புரையின்போது நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் தேர்தல் பரப்புரை பயணமாக டெல்லியிலிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி நேற்று வந்தடைந்தார். அங்கு வந்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் பலர், உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நேற்று தூத்துக்குடியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதையடுத்து இன்று திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள … Read more

100 கோடிக்கு மேல் வசூல் செய்த தல அஜித் திரைப்படங்கள்..!

அஜித் நடிப்பில் வெளியான படங்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்களின் பட்டியல். தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் தற்போது உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது திரைப்படங்கள் திரையரங்கிற்கு வந்தாலே திருவிழாக போலத்தான் இருக்கும். மேலும் நடிகர் அஜித் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளதால் அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள். இந்த நிலையில் … Read more

முயல் வேட்டை…துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்.!

 நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயமடைந்தார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே காட்டுப்பகுதியில் மூன்று நண்பர்கள் முயல் வேட்டையாட சென்ற இடத்தில் நாட்டுத்துப்பாக்கி சுட்டதில் முருகேசன் (29) என்பவர் காயமடைந்தார். முருகேசன் மீது குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்தில் இருந்து பயந்து கூட இருந்த நண்பர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

தளபதி-65 படத்தின் மாஸ் அப்டேட்.!

தளபதி-65 படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் ரஷ்யாவில் வைத்து தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் தனது மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் தளபதி-65 படத்தின் ஒளிப்பதிவாளராக நண்பன் படத்தில் பணியாற்றிய மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.மேலும் இந்த படத்தின் ஹீரோயின், வில்லன் வேடத்தில் … Read more

இந்த 8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு 3 டிகிரி வெப்பநிலை உயரும்..வானிலை மையம்..!

8 மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோடைக் காலம் நெருங்கி வரும் நிலையில் 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதில், மதுரை, திருச்சி, தர்மபுரி, நாமக்கல், கரூர், சேலம், வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என … Read more

“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ​​கல்விக்கான உதவித்தொகை வழங்குவதை அதிகரிப்போம்”- ராகுல் காந்தி!

பாளையங்கோட்டையில் உள்ள செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரி பேராசிரியர்களுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ​​கல்விக்கான உதவித்தொகை வழங்குவதை அதிகரிப்போம் என தெரிவித்துள்ளார். தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இதன்காரணமாக அந்த 5 மாநிலங்களில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தது. இதனால் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அந்தவகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பரப்புரைக்காக 3 நாள் பயணமாக … Read more