மிரட்டலாக வெளியான “மிருகா ” படத்தின் டிரைலர்…! வெளியிட்ட அசுரன் தனுஷ்..!

ஸ்ரீகாந்த் மற்றும் ராய் லட்சுமி நடித்துள்ள மிருகா டிரைலரை நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இயக்குனர் ஜே.பார்த்திபன் இயக்கத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் ராய் லட்சுமி நடித்துள்ள திரைப்படம் மிருகா. இந்த படத்தில் தேவ் கில், நைரா, வைசனவி, அரோஹி & பிளாக் பாண்டி போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அருல்டேவ் இசையமைத்துள்ளார். ஜாகுவார் ஸ்டுடியோக்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பி.வினோத் ஜெயின் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில்  புலியுடன் போராடும் ராய் லட்சுமி, ஸ்ரீகாந்த் கடைசியாக என்ன செய்ய போகிறார்கள் என்பதுதான் கதையாம். இந்த படத்தின் வில்லனாக மிகவும் ரசிகர்களுக்கு பிடித்த வகையில் நடிகர் ஸ்ரீகாந்த் மிரட்டியுள்ளார். வருகின்ற மார்ச் மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.