#BREAKING: வியூகத்துக்கு முற்றுப்புள்ளி.. திமுக கூட்டணி தொடரும் – முதலமைச்சர் ஸ்டாலின்

பிரதமர் மோடி வருகையால் திமுக –  பாஜக கூட்டணி ஏற்படும் என்று தகவல் பரவிய நிலையில், முதலமைச்சர் விளக்கம். தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆரோக்கியமான கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கான கூட்டணி அல்ல, கொள்கைக்கான கூட்டணி. பிரதமர் மோடி வருகையால் திமுக – பாஜக இடையே கூட்டணி ஏற்பட போவதாக தகவல் வெளியான நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை மாமல்லபுரத்தில் செஸ் … Read more

பதவி வெறி., கூட்டணி கோட்பாடுகளை மீறுவது ஆரோக்கியமானதல்ல – சிபிஎம் மாநில செயலாளர்

தமிழகத்தில் உள்ள மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று பதவியேற்று வருகின்றனர். இருப்பினும், சில இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கூட்டணி கட்சிகள் திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்து வருகிறது. … Read more

கூட்டணி அறத்தை காத்திட வேண்டும் – முதலமைச்சருக்கு திருமாவளவன் கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 21 மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. 20 மாநகராட்சிகளில் திமுக வேட்பாளர்களும், கும்பகோணம் மாநகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர். இதைத்தவிர பெரும்பாலான உள்ளாட்சி பதவிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளது. … Read more

இந்தந்த இடங்களில் கூட்டணியை வீழ்த்தி வெற்றி பெற்ற திமுக..!

நேற்று திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பிட்ட சில இடங்களை ஒதுக்கீடு செய்தது. இதைதொடர்ந்து, கூட்டணி கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு தங்களது வேட்பாளர்களை அறிவித்தனர். இன்று மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர் பேரூராட்சி தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் திமுக வேட்பாளர்கள் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதன்படி, தருமபுரி: விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட பொ.மல்லாபுரம் பேரூராட்சித் தலைவர் … Read more

#BREAKING: 21 மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 22-ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர்.  இதனைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் … Read more

மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

நாளை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர், மண்டல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுக்கான மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை தலைவர், பேரூராட்சி தலைவர், துணை தலைவர் போன்ற உள்ளாட்சி இடங்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த விவரங்களை திமுக தலைமை வெளியிட்டிருந்தது. அதன்படி, திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஆவடி மாநகராட்சி துணை மேயர் பதவி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. மேலும், 1 நகராட்சி தலைவர், 3 நகராட்சி துணைத்தலைவர், 3 பேரூராட்சி … Read more

#BREAKING: திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 வார்டுகள் ஒதுக்கீடு!

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் 6 வார்டுகள் ஒதுக்கீடு. சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 வார்டுகள் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உரிய இடஒதுக்கீடு கோரி கூட்டணி கட்சிகள், முதன்மை கட்சியான திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், அவற்றில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சென்னை மாநகராட்சியில் திமுக கூட்டணியில் 6 வார்டுகள் ஒதுக்கீடு … Read more

அதிமுகவின் முகக்கவசத்தை அகற்றினால் ஆர்எஸ்எஸ், பாஜக தான் தெரியும் – ராகுல் காந்தி

மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கப்போகிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். வரும் சட்டப்பேரவை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இது பழைய அதிமுக என்று யாரும் நினைக்கக்கூடாது என்றும் தற்போது இருப்பது மாஸ்க் அணிந்த அதிமுக எனவும் விமர்சித்துள்ளார். அதிமுகவின் முகக்கவசத்தை அகற்றினால் ஆர்எஸ்எஸ், பாஜக தான் தெரியும். பழைய அதிமுக போய்விட்டது. இன்றைக்கு ஆர்எஸ்எஸ், … Read more

தமிழகத்தில் காலூன்றி விடலாம் என பாஜக நினைக்கிறது – திருமாவளவன்

அதிமுக தலைமையிலான கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சேலம் சீலநாயக்கன்பட்டியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கூட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று புதிய வரலாற்றை படைக்க வேண்டும். எதிரணியில் இருப்பவர்கள் கொள்கை அடிப்படையில் இணைந்தவர்கள் அல்ல, அதிமுக தலைமையிலான கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என கூறியுள்ளார். அதிமுக மீது சவாரி செய்து தமிழகத்தில் வலிமை பெறலாம் என … Read more

நேர்மையை இழந்துவிட்டார் முதல்வர்…, தமிழகம் தமிழகத்திலிருந்து ஆளவேண்டும் – ராகுல்காந்தி

தமிழகம் தமிழக்தில் இருந்து ஆளப்படும் ஆட்சி முறையை நான் விரும்புகிறேன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சென்னை அடையாறில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், டெல்லியில் இருந்து ஆட்சி செய்யாமல், தமிழகம் தமிழக்தில் இருந்து ஆளப்படும் ஆட்சி முறையை நான் விரும்புகிறேன். நான் எப்பொழுது தமிழ்நாடு என்பது இந்தியா என்று சொன்னேனோ, அப்பவே இந்தியா என்பதும் தமிழ்நாடு தான். இந்தியா முன்பு தமிழகம் கீழ்மட்டத்தில் … Read more