போராடி தோற்ற ஜிம்பாப்வே.. இலங்கை அணி திரில் வெற்றி..!

SLvZIM

இலங்கை உடனான ஜிம்பாப்வே சுற்று பயணத்தில் 3 ஒருநாள் போட்டியும் , 3 T20 போட்டியும் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் ஜனவரி 6 அன்று நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் (Toss ) ஐ வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது அதில் இலங்கை அணியின்  பேட்ஸ்மேன் ஆன அசலங்கா நிதனாமாக விளையாடி 105(95) ரன்களை விளாசினார். அவரது ஆட்டத்தால் இலங்கை அணி 50 ஓவர்களில் 273 ரன்களை சேர்த்து. 274 ரன்களை … Read more

#T20 WC 2022: மேக்ஸ் ஓ டௌட் அரைசதத்துடன், ஜிம்பாப்வேவை வீழ்த்தியது நெதர்லாந்து அணி.!

டி-20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே-நெதர்லாந்து போட்டியில் நெதர்லாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று அடிலெய்டில் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, நெதெர்லாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்களை பறிகொடுத்தனர். 20 வர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா 40 ரன்களும், சான் … Read more

#T20 WC 2022: நெதர்லாந்து அணிக்கு 118 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஜிம்பாப்வே.!

டி-20 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே-நெதர்லாந்து போட்டியில் ஜிம்பாப்வே அணி 117ரன்கள் குவித்துள்ளது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. இதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் சிக்கந்தர் ராசா மற்றும் சான் வில்லியம்ஸ் தவிர மற்ற வீரர்கள் எவரும் நிலைத்து ஆடவில்லை. சிக்கந்தர் ராசா 3 பௌண்டரி மற்றும் 3 சிக்ஸரகளுடன் 40 ரன்களும், சான் வில்லியம்ஸ் 28 … Read more

T20 WC: ஜிம்பாப்வேக்கு 151 ரன் இலக்கு வைத்தது பங்களாதேஷ்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் – ஜிம்பாப்வே அணிகள் மோதின.டாஸ் வென்று பேட் செய்ய முடிவு செய்தது பங்களாதேஷ் அணி. தொடக்க வீரர்களாக நஜ்முல் ஹொசைன் சாண்டோவும், சௌமியா சர்க்கார் களமிறங்கினர். சௌமியா சர்க்கார் டக் அவுட்டாக, மறுமுனையில் ஹொசைன் சாண்டோ அரைசதம் அடித்து அணிக்கு வலுசேர்ந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய லிட்டன் தாஸ் 14 , ஷகிப் அல் ஹசன் 23 , அஃபிஃப் ஹொசைன் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர் .ஜிம்பாப்வே … Read more

#T20 World Cup 2022: டாஸ் வென்று ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங்.!

டி-20 உலககோப்பையின் கடைசி தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்று ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதி சுற்று போட்டிகள் அக்-16இல் தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. குரூப் Aவில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகளும், குரூப் Bவில் அயர்லாந்து அணியும் சூப்பர்-12க்கு தகுதி பெற்றுள்ளன. தற்போது இன்று நடைபெறும் கடைசி தகுதிச்சுற்று போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெரும் … Read more

#T20 World Cup 2022: அல்சாரி ஜோசப் அசத்தல் பௌலிங், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் வெற்றி.!

ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் 8 ஆவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது சீசன் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய எட்டாவது ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் … Read more

#T20 World Cup 2022: டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்.!

ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் 8 ஆவது தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. முன்னதாக 7 ஆவது போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிராக அயர்லாந்து அணி அதிரடியாக விளையாடி 176 ரன் வெற்றி இலக்கை 19 ஓவர்களில் எளிதாக எட்டி வெற்றி அடைந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் … Read more

#T20 World Cup 2022: டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பௌலிங்.!

ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் நான்காவது ஆட்டத்தில் டாஸ் வென்று அயர்லாந்து அணி பௌலிங் தேர்வு செய்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி-20 உலகக்கோப்பை தொடரின் நான்காவது தகுதிச்சுற்று போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. மூன்றாவது தகுதிச்சுற்று போட்டியில்  அணி ஸ்காட்லாந்து அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. முன்னதாக ஸ்காட்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய போட்டி மழை காரணமாக சிறிது நேரம் தடைப்பட்டதால் அடுத்த போட்டிக்கான டாஸ் … Read more

#Shocking:ஈஸ்டரில் சோகம்-பேருந்து விபத்தில் 35 பேர் பலி;71 பேர் படுகாயம்

ஜிம்பாப்வேயில்,ஈஸ்டர் வாரமான புனித வெள்ளியை முன்னிட்டு திருப்பலிக்காக தேவாலயத்திற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து,நிலை தடுமாறி தென்கிழக்கு சிப்பிங்கே நகரில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து கவிழ்ந்ததில் குறைந்தது 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும்,71 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து,காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். Today there was a bus accident in Zimbabwe which killed 35 people. Those who have survived have been put in this … Read more

U-19 உலகக்கோப்பை: அயர்லாந்து-ஜிம்பாப்வே போட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கம்..!

U-19 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்து-ஜிம்பாப்வே இரு அணிகளுக்கிடையிலான போட்டியின் போது  நிலநடுக்கம் உணரப்பட்டது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில்  குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து இடையேயான போட்டியின் போது நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் போது மைதானத்தில் லேசான நடுக்கம் ஏற்பட்டது. அயர்லாந்துக்கு எதிராக ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது நிலநடுக்கம் உணரப்பட்டது. திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீரர்கள் சற்று பதற்றமடைந்தனர். இருப்பினும், சிறிது நேரத்தில் எல்லாம் இயல்பு … Read more