போராடி தோற்ற ஜிம்பாப்வே.. இலங்கை அணி திரில் வெற்றி..!

இலங்கை உடனான ஜிம்பாப்வே சுற்று பயணத்தில் 3 ஒருநாள் போட்டியும் , 3 T20 போட்டியும் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் ஜனவரி 6 அன்று நடந்த முதல் ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் (Toss ) ஐ வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது அதில் இலங்கை அணியின்  பேட்ஸ்மேன் ஆன அசலங்கா நிதனாமாக விளையாடி 105(95) ரன்களை விளாசினார். அவரது ஆட்டத்தால் இலங்கை அணி 50 ஓவர்களில் 273 ரன்களை சேர்த்து.

274 ரன்களை எடுத்தால் வெற்றி  என களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சற்று தடுமாற்றத்தில் விளையாடினர். 4 ஓவர் முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகளை கொடுத்து 12 ரன்களே எடுத்து இருந்தது. இந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் மேலும் ஆட்டத்தை தொடர முடியாமல் ஆட்டம் கைவிடபட்டது.

இன்று இரு அணிகளும் இரண்டாம் ஒருநாள் ஆட்டத்தை விளையாடினர். டாஸ் (Toss)ஐ  வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. கடந்த போட்டியை போல இன்றைய போட்டியிலும் இலங்கையின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய தொடக்க வீரர்கள் முதல் ஒவரிலேயே முதல் விக்கெட்டை விட்டு கொடுத்தனர். சீரான இடைவெளியில் இரண்டாவது விக்கெட்டும் விழுந்தது.

பின்னர் காலத்தில் நின்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ஆன கிரேக் எர்வின் நிதானமாக நின்று பொறுப்புடன் ரன்களை சேர்த்தார். அவர் 102 பந்திற்கு 82 ரன்களுடன்  விளையாடி கொண்டிருக்கையில் சமீரா பந்தில் சமாராவிக்ரமாவிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். அவர் ஆட்டமிழந்தபோது அணி 182 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. 

பிறகு களமிறங்கிய வீரர்கள் நிலைத்து நிற்காமல் அடுத்ததடுத்து விக்கெட்டை விட்டு கொடுத்தனர். இதன் காரணமாக  ஜிம்பாப்வே அணி 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டை பறிகொடுத்து  208 ரன்களை மட்டுமே சேர்த்தது. 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்   இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் களமிறங்கினர்.

இருப்பினும் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் அந்த அணியின் பேட்ஸ்மேன் ஆன ஜனித் லியனகே மட்டும் தனியாக நின்று போராடினர். அந்த அணி 30.5 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 112 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

பின்னர் 7-வது விக்கெட்டுக்கு கை கோர்த்த  இலங்கை அணியின் ஜனித் லியனகே மற்றும்  மகேஷ் தீக்ஷனா இருவரும் சற்று நிதானமாக ஆடி 56 ரன்களை தங்களது கூட்டணியில்  சேர்த்து இருந்த நிலையில் தீக்ஷனா தனது விக்கெட்டை  விட்டு கொடுத்தார்.

இக்கட்டான சூழ்நிலையில் யாரும் எதிர்பாரத விதமாக ஜனித் லியனகே, முசரபானி பந்தில் ஆட்டமிழந்தார். பிறகு கூட்டு சேர்ந்த சமீராவும், வாண்டர்சேவும் தட்டி தட்டி ரன்களை சேர்த்து 49 ஓவர் முடிவில் இலக்கை எட்டி 2 விக்கெட்டு வித்தியாசத்தில் இலங்கை அணியை வெறி பெற வைத்தனர். 

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.