#Shocking:ஈஸ்டரில் சோகம்-பேருந்து விபத்தில் 35 பேர் பலி;71 பேர் படுகாயம்

#Shocking:ஈஸ்டரில் சோகம்-பேருந்து விபத்தில் 35 பேர் பலி;71 பேர் படுகாயம்

ஜிம்பாப்வேயில்,ஈஸ்டர் வாரமான புனித வெள்ளியை முன்னிட்டு திருப்பலிக்காக தேவாலயத்திற்கு சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து,நிலை தடுமாறி தென்கிழக்கு சிப்பிங்கே நகரில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து கவிழ்ந்ததில் குறைந்தது 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மேலும்,71 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து,காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,இது தொடர்பாக,காவல்துறை செய்தித் தொடர்பாளர் உதவி ஆணையர் பால் நியாதி கூறுகையில்:”நேற்று இரவு நடந்த விபத்தில் இதுவரை,இறந்தவர்களின் எண்ணிக்கை 35 மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து,36 ஜிம்பாப்வே கிறிஸ்தவ தேவாலய (ZCC) உறுப்பினர்களின் உயிரைப் பறித்த பேருந்து விபத்தை தேசிய பேரிடராக ஜனாதிபதி எம்மர்சன் மங்காக்வா அறிவித்தார்.இன்று நள்ளிரவு முதல் ஈஸ்டர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் ஜிம்பாப்வே பேருந்து விபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளது அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Join our channel google news Youtube