#T20 World Cup 2022: டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்.!

ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் 8 ஆவது தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. முன்னதாக 7 ஆவது போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிராக அயர்லாந்து அணி அதிரடியாக விளையாடி 176 ரன் வெற்றி இலக்கை 19 ஓவர்களில் எளிதாக எட்டி வெற்றி அடைந்தது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்திருக்கிறது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம் பின்வருமாறு,

வெஸ்ட் இண்டீஸ் அணி: கைல் மேயர்ஸ், ஜான்சன் சார்லஸ், எவின் லூயிஸ், நிக்கோலஸ் பூரன்(w/c), ஷமர் ப்ரூக்ஸ், ரோவ்மேன் பவல், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், ஒடியன் ஸ்மித், ஓபேட் மெக்காய்

ஜிம்பாப்வே அணி: ரெஜிஸ் சகாப்வா(w/c), வெஸ்லி மாதேவெரே, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, டோனி முனியோங்கா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, டெண்டாய் சதாரா, ரிச்சர்ட் ங்கராவா, ஆசிர்வாதம் முசரபானி

author avatar
Muthu Kumar

Leave a Comment