வேட்புமனு தாக்கலின்போது கடும் வாக்குவாதம்… நடந்தது என்ன? திமுக – அதிமுக விளக்கம்!

d jayakumar

DMK-ADMK : வட சென்னை தொகுதியில் திமுக – அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் கடும் வாக்குவாதம். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் இன்று காலை முதல் வேட்பு மனுத்தாக்கல் செய்து வந்தனர். அந்தவகையில், வடசென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி, அதிமுக சார்பில் ராயபுரம் மனோ ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய … Read more

வேட்புமனு தாக்கலில் வெடித்த சர்ச்சை.! திமுக – அதிமுக இடையே கடும் வாக்குவாதம்.!

DMK vs ADMK

DMK-ADMK : வடசென்னை மக்களவை தொகுதியில் யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என்பது தொடர்பாக திமுக  அதிமுகவினர் இடையே வாக்குவாதம். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 2 நாட்களே (மார்ச் 28 கடைசி நாள்) உள்ள நிலையில், இன்று பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை அந்தந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர். வடசென்னை மக்களவை தொகுதிக்கான திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோரும் … Read more

5YearsofVadaChennai : வெற்றிமாறனின் தரமான சம்பவம்…கோலிவுட்டில் அதிர்வை ஏற்படுத்திய ‘வடசென்னை’!

VadaChennai poster

தமிழ் சினிமாவில் எத்தனையோ கேங்ஸ்டர் படங்கள் வந்திருந்தாலும் அதில் தலை சிறந்த படங்களில் ஒரு சில படங்கள் இருக்கும். அதில் குறிப்பாக இருக்கக்கூடிய படம் என்றால் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷின் நடிப்பில் கடந்த 2016 -ஆம் ஆண்டு வெளியான ‘வடசென்னை’ திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா ஜெர்மியா, கிஷோர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தர்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இந்த … Read more

VadaChennai Advance bookings: அட்வான்ஸ் புக்கிங்கில் அதிர வைத்த ‘வடசென்னை’ ! ரீ -ரிலீசுக்கே இப்படியா?

VadaChennai

வடசென்னை திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படத்திற்கான டிக்கெட் புக்கிங் மும்மரமாக நடைபெற்று வருகிறது. வடசென்னை  இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வடசென்னை. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த பலத்த வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ரீ-ரிலீஸ்  மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த வடசென்னை திரைப்படம் மக்களுக்கு மத்தியில் … Read more

ராஜன் இல்லாமலே தயாராகும் ராஜன் வகையறா.?! வெற்றிமாறனின் மாஸ்டர் பிளான்.!

வடசென்னை படத்தில் பயன்படுத்தாமல் மீதம் உள்ள அமீர் நடித்த ராஜன் காட்சிகளை வெப் சீரிஸில் பயன்படுத்த வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் நடித்து இல்லை இல்லை அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்த திரைப்படம் வடசென்னை. இந்த திரைப்படம் முடியும் போதே இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிப்போடு நிறைவு பெற்றிருக்கும். இந்த படத்தில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாபாத்திரம் தான் வடசென்னையில் முக்கிய கதாபாத்திரம். அந்த … Read more

வடசென்னையை மையமாக வைத்து உருவாகும் வெப் சீரிஸ்…!!

வடசென்னை படத்தில் நடித்த அமீரின் ராஜன் கதாபாத்திரைத்தை மையமாக வைத்து ஒரு வெப் சீரிஸ் இயக்கவுள்ளதாக இயக்குனர் வெற்றி மாறன் கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து  பிரபலமான இயக்குனராக வளம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்று தேசிய விருது பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக இயக்குனர் வெற்றி மாறன் … Read more

அசுரன் வடசென்னை தான் எனக்கு பிடிக்கும்.! ராசி கண்ணா ட்வீட்

தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த இயக்குநர்கள் யார் என்று கேட்டதற்கு தமிழ் சினிமாவில் திறமையான பல இயக்குநர்கள் உள்ளனர். அதில் வெற்றிமாறன் சார், ஷங்கர் சார், மணிரத்னம் சார் மற்றும் அட்லி உள்ளிட்டவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். ராஷி கன்னா தமிழ் சினிமாவில் கடந்தாண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் இவர் நடிகர் அதர்வா முரளிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனையடுத்து தமிழில் அயோக்யா, சங்கதமிழன் … Read more

படுக்கை அறை காட்சியில் நடித்தது தவறாகப் போய்விட்டது பிரபல நடிகை பேட்டி

நடிகை ஆண்ட்ரியா கண்ட நாள் முதல் என்ற திரைப் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில்,  இவர் வட சென்னை திரை படத்தில் படுக்கை அறை காட்சியில் மிகவும் நெருக்கமாக நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் இணையதளத்தில் லீக் ஆனது. இது குறித்து பேட்டியளித்த ஆண்ட்ரியா, வடசென்னை படத்தில் படுக்கையறை காட்சிகளை மிக … Read more

#TamilCinema2019 : தேசிய விருதுபட்டியலில் ஓரங்கட்டப்பட்ட தமிழ் சினிமா!

தமிழ் சினிமாவில் இந்தாண்டு வழங்கப்பட்ட தேசிய விருது சிறந்த தமிழ் மொழி திரைப்படம் என்கிற பிரிவில் பாரம் எனும் படத்திற்கு கிடைத்தது. 2018இல் மேற்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள், வட சென்னை, 96, ராட்சசன், கானா என பல படங்கள் வெளியாகி இருந்தன. 2018 ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுக்கு இந்த வருடம் இந்திய அரசு வழக்கம் போல தேசிய விருதினை அறிவித்தது.ஆனால் அந்த லிஸ்டில் பெரும்பாலும் தென்னிந்திய திரைப்படங்கள் இடம் பெற வில்லை. … Read more

வைரலாகும் வடசென்னை ஆண்ட்ரியாவின் கவர்ச்சி புகைப்படம் !

ஆண்ட்ரியா, இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மூலம் அறிமுகமாகியவர். இதன்பின் விஸ்வரூபம், மங்காத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் தனுசுடன் நடித்த வடசென்னை படமே இறுதியாக நடித்ததாகும். இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் ஆண்ட்ரியா கருப்பு அறைகுறை ஆடையை அணிந்து வித்தியாசமான போஸ் கொடுத்துள்ளார்.