அசுரன் வடசென்னை தான் எனக்கு பிடிக்கும்.! ராசி கண்ணா ட்வீட்

அசுரன் வடசென்னை தான் எனக்கு பிடிக்கும்.! ராசி கண்ணா ட்வீட்

தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த இயக்குநர்கள் யார் என்று கேட்டதற்கு தமிழ் சினிமாவில் திறமையான பல இயக்குநர்கள் உள்ளனர். அதில் வெற்றிமாறன் சார், ஷங்கர் சார், மணிரத்னம் சார் மற்றும் அட்லி உள்ளிட்டவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

ராஷி கன்னா தமிழ் சினிமாவில் கடந்தாண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் இவர் நடிகர் அதர்வா முரளிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனையடுத்து தமிழில் அயோக்யா, சங்கதமிழன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதன் பின்னர் பல தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். கடந்த மாதம் இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் வேல்ட் ஃபேமஸ் லவ்வர். இந்த படத்தை கிராந்தி மாதவ் இயக்கினார். மேலும், இவருடன் விஜய் தேவரகொண்டா, கேத்ரின் தெரசா , ஐஸ்வர்யா ராஜேஷ், இசபெல் லைட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெறவில்லை. 

தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் ரசிகர்களிடம் உரையாடல் நடத்தி நேரத்தை செலவிடட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி உள்ளார்.அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு பிடித்த தனுஷ் படம் எது கேட்கையில், அசுரன் மற்றும் வடசென்னை ஆகிய இரண்டு தனுஷ் படங்கள் பிடிக்கும் என்று பதிலளித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த இயக்குநர்கள் யார் என்று கேட்டதற்கு தமிழ் சினிமாவில் திறமையான பல இயக்குநர்கள் உள்ளனர். அதில் வெற்றிமாறன் சார், ஷங்கர் சார், மணிரத்னம் சார் மற்றும் அட்லி உள்ளிட்டவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

Join our channel google news Youtube