வடசென்னையை மையமாக வைத்து உருவாகும் வெப் சீரிஸ்…!!

வடசென்னையை மையமாக வைத்து உருவாகும் வெப் சீரிஸ்…!!

வடசென்னை படத்தில் நடித்த அமீரின் ராஜன் கதாபாத்திரைத்தை மையமாக வைத்து ஒரு வெப் சீரிஸ் இயக்கவுள்ளதாக இயக்குனர் வெற்றி மாறன் கூறியுள்ளார். 

தமிழ் சினிமாவில் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து  பிரபலமான இயக்குனராக வளம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்று தேசிய விருது பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக இயக்குனர் வெற்றி மாறன் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து நாவலை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து இந்த படத்தை தொடர்ந்து ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஒரு திரைப்படமும் அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தையும் இயக்கவுள்ளார். இதற்கு இடையில், வடசென்னை படத்தில் நடித்த அமீரின் ராஜன் கதாபாத்திரைத்தையும் வடசென்னையும் மையமாக வைத்து ஒரு வெப் சீரிஸ் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. நேரடியாக அந்த வெப் சீரிஸ் ஓடிடியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பும் வடசென்னையில் வைத்து நடைபெறவுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube