மநீம நிர்வாகிகள் கூட்டம் ஒத்திவைப்பு.. கமலின் பயணம் ரத்து? காரணம் இதுதானா?

Kamal Haasan

Kamal Haasan : திமுகவுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் வரும் வாரங்களில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் பிரதான கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, பரப்புரை என விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. Read More – கரும்பு விவசாயி தான் … Read more

கோவையில் 90,000 பேர் வாக்களிக்காததால் தோல்வியை சந்தித்தேன்- கமல்ஹாசன்..!

Kamal Haasan

மக்கள் நீதி மய்யம் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவை தொடந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினார். அப்போது ” இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வேட்பாளர் 95 லட்சம் ரூபாய் செலவு செய்யலாம் என கூறுகிறது. தேர்தலில் 95 லட்சம்  மட்டும் செலவு செய்தால் என்ன ஆகும், கோவை தெற்கு தான் ஆகும். நான் கோவையில் தோல்வியடைந்தது 1,728 ஓட்டுகள் அல்ல எனது தோல்வியாக நான் கருதுவது … Read more

முழுநேர அரசியல்வாதி யார் என சொல்லுங்கள்.. நான் எதற்காக சினிமாவில் நடிக்கிறேன் என சொல்கிறேன் – கமல்

kamalhassan

மக்கள் நீதி மய்யத்தின் 7ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கட்சியின் தொடக்க விழாவையொட்டி இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கட்சி கொடியை ஏற்றி வைத்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது கமல்ஹாசன் கூறியதாவது, மக்கள் நீதி மய்யம் இன்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தலை எதிர்கொண்டுள்ளோம். பணம் பலமோ, ஊடக பலமோ, … Read more

இன்று மக்கள் நீதி மய்யம் 7-ம் ஆண்டு தொடக்க விழா..!

Makkal Needhi Maiam

மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாச்சலம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் “வரும் பிப்ரவரி 21 (21-2-2024) நமது மக்கள் நீதி மய்யத்தின் 7-ம் ஆண்டு துவக்க நாளாகும். அந்த நாளை சிறப்புடன் கொண்டாடும் வண்ணம் அன்று  காலை 10 மணியளவில், கமல்ஹாசன் சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், மக்கள் நீதி மய்யக் கொடியினை ஏற்றிவைத்து தொண்டர்களிடையே சிறப்புரையாற்ற உள்ளார். அந்த நிகழ்வை சிறப்பிக்கும் பொருட்டு நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், அமைப்பு மற்றும் அணிகளைச் சேர்ந்த மண்டல, … Read more

2 நாட்களில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன் – மநீம தலைவர் கமல்

kamal Haasan

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடர்பான நிலைப்பாட்டை இன்னும் இரண்டு நாட்களில் நல்ல செய்தியுடன் உங்களை சந்திக்கிறேன் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைமைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை மக்களவை தேர்தலுக்கான பணியில் அனைத்து பிரதான கட்சிகளும் ஆயுதமாகி வருகிறது. இந்த முறை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக மற்றும் பாஜக தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தான், கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் … Read more

நாடாளுமன்ற தேர்தல்..! மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்கீடு

நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘டார்ச் லைட்’ சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்திய நாடாளுமன்றத்திற்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது, தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் அமைந்துள்ளன. இங்குள்ள பல முக்கிய கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் உள்ளன. திமுக கூட்டணியில் மக்கள் … Read more

நாடாளுமன்ற தேர்தல்..! ம.நீ.ம கட்சியின் தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவை அறிவித்த கமல்ஹாசன்

நாடாளுமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியில் பல்வேறு கட்சிகள் முழுவீச்சில் இறங்கியுள்ளன. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழுவை அறிவித்து தேர்தல் தொடர்பான பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அந்த வகையில் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியுள்ளது. அதன்படி தேர்தல் பணி ஒருங்கிணைப்புக் குழுவை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த 6 … Read more

களத்தில் நிற்கும் நம்மவரை விமர்சிப்பதா? இபிஎஸ்-க்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்!

makkal needhi maiam

மழை, வெள்ளத்துக்குப் பயந்து ஓடிப்போய் எங்கோ பதுங்கிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, களத்தில் நிற்கும் நம்மவரை விமர்சிப்பதா? என மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் தலைநகரம் புயல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, எங்கோ ஒடிப்போய் பதுங்கிக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், மக்கள் நலனுக்காக களத்தில் நிற்கும் நம்மவரை பச்சோந்தி என்று விமர்சித்திருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. மக்கள் நீதி மய்யமும், அதன் தொண்டர்களும் சென்னையின் பல்வேறு … Read more

அரசை பிறகு விமர்சித்து கொள்ளலாம்.. தற்போது மக்களுக்கு உதவுவோம் – கமல்ஹாசன் பேட்டி

kamal haasan

மிக்ஜம் புயல் மழையால் சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தத்தால் நகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பெரும்பான்மையான இடங்களில் மழைநீர் வடிந்த நிலையில், சில இடங்களில் மழைநீர் வடியாமல் உள்ளது. அதுமட்டுமில்லாமல், உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை … Read more

கமல்ஹாசனின் மநீம மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்.!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாளை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.  நடிகர் கமல்ஹாசன் தலைவராக உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில், வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை, கூட்டணி, வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது இந்த ஆலோசனை கூட்டத்தில் அவசர நிர்வாக குழு உறுப்பினர்கள், மாவட்ட செயல்குழு, மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் கலந்து … Read more