கமல்ஹாசனின் மநீம மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்.!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நாளை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 

நடிகர் கமல்ஹாசன் தலைவராக உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இதில், வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை, கூட்டணி, வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது

இந்த ஆலோசனை கூட்டத்தில் அவசர நிர்வாக குழு உறுப்பினர்கள், மாவட்ட செயல்குழு, மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment