ஹரியானாவில் பள்ளி பேருந்து மோதி விபத்து…5 மாணவர்கள் பலி, 15 பேர் காயம்.!

Bus Accident In Haryana

Bus Accident: ஹரியானா மாநிலம் மகேந்திரகரில் உள்ள உன்ஹானி கிராமம் அருகே மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி ஐந்து மாணவர்கள் உயிரிழந்தனர் மற்றும் 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய போலீசார் தீவிரமாக விசரணையில்  ஈடுபட்டுள்ளனர். காயமடைந்த குழந்தைகள் தற்போது அவசர மருத்துவ சிகிச்சையைப் பெற்று வருகின்றனர்.

ஹரியானாவின் புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்றார்!

Nayab Singh Saini

Haryana : பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனி பதவியேற்று கொண்டார்.   ஹரியானாவில் பாஜக, ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், ஹரியானா மாநில முதல்வராக பாஜக மூத்த தலைவர் மனோகர் லால் கட்டார் முதல்வர் பொறுப்பில் இருந்து வந்தார். Read More – ஹரியானா அரசியலில் திடீர் திருப்பம்… முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா! இந்த சூழலில் கூட்டணியில் திடீர் விரிசல் காரணமாக முதலமைச்சர் … Read more

ஹரியானா அரசியலில் திடீர் திருப்பம்… முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா!

Manohar Lal Khattar

Manohar Lal Khattar : ஹரியானா அரசியலில் திடீர் திருப்பமாக அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உட்பட அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு பதவி விலகினர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவுக்கு அடுத்தடுத்து பெரிய அடி விழுந்து வருகிறது. அதாவது, முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லி நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் உள்ளிட்ட மூன்று எம்பிக்கள் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், இதில் ராஜஸ்தான் பாஜக எம்பி ஒருவர் … Read more

ஹரியானாவில் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் மாநிலத் தலைவர் சுட்டுக்கொலை

ஹரியானா மாநிலத்தில் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நஃபே சிங் ரதீ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் பகதூர்கர் நகரில் தான் இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது. அடையாளம் தெரியாத மர்மநபர்களால் நஃபே சிங் கொல்லப்பட்ட நிலையில் அவருடன் சேர்ந்து இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் மற்றொரு நபரும் கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்த அந்த நபரின் பெயர் ஜெய்கிஷன் என தெரியவந்துள்ளது. ஹூண்டாய் ஐ10 காரில் வந்த … Read more

விவசாயிகள் போராட்டம்… பல நகரங்களில் இணைய சேவை துண்டிப்பு..!

farmers protest

விலைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க கோரி டெல்லியில் நாளை மறுநாள் விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளனர்.  இதற்காக அவர்கள் நாளை முதல் அரியானாவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு செல்ல உள்ளனர். உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த 200 சங்கங்கள் விடுத்த அழைப்பை ஏற்று விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டு செல்கின்றனர். டெல்லிக்குள் விவசாயிகள் நுழைவதை தடுக்க ஹரியானா மாநில எல்லையில் உள்ள சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். உத்தரபிரதேசம் … Read more

மக்களவை தேர்தல் – ஜன28ல் ஆம் ஆத்மி பேரணி!

AAP RALLY

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் ஒருபக்கம் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. மக்களவை தேர்தலுக்கான கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்குறுதி என தீவிரம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், பாஜகவுக்கு எதிராக உருவாகியுள்ள இந்தியா கூட்டணியில் சீட் பகிர்வு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதன்படி, இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி … Read more

குருகிராம் ஹோட்டலுக்கு வந்த மாடல் அழகி.! 10 நாட்களுக்கு பின் கால்வாயில் சடலமாக மீட்பு.!

Divya Pahuja

ஹரியானா, தோஹ்னாவில் உள்ள கால்வாயில் முன்னாள் மாடல் அழகி திவ்யா பஹுஜாவின் (Divya Pahuja) உடலை குருகிராம் போலீசார் மீட்டுள்ளனர். கடந்த ஜனவரி 2ஆம் தேதியன்று அதிகாலை 4 மணியளவில் முன்னாள் மாடல் அழகி திவ்யா பஹுஜா, ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அதன்பிறகு அந்த ஹோட்டல் உரிமையாளர் அபிஜீத் சிங்கால் சுட்டுக் கொல்லப்பட்டார் என ஹரியானா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 4 வயது சிறுவன் மரணம் : ஒரு வார்த்தை … Read more

ஹரியானாவில் கள்ள சாராயம் குடித்து 19 பேர் உயிரிழப்பு.. 7 பேர் கைது..!

ஹரியானாவில் யமுனாநகர் மற்றும் அம்பாலா மாவட்டத்தில்  உள்ள சில கிராமங்களில் கள்ள சாராயம் குடித்து 19 பேர் உயிரிழந்துள்ளன. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மது வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து, இதுவரை ஏழு பேரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், உயிருக்கு பயந்து மது வியாபாரிகளுக்கு எதிராக வெளிப்படையாக பேச கிராம மக்கள் பயப்படுகிறர்கள். … Read more

ஹரியானா அமைச்சர் சந்தீப் சிங் மீது பாலியல் புகார்!

ஹரியானா அமைச்சர் சந்தீப் சிங் மீது பயிற்சியாளர் பாலியல் குற்றச்சாட்டு. ஹரியானா விளையாட்டுத்துறை அமைச்சரும், இரண்டு முறை ஒலிம்பியனுமான சந்தீப் சிங் மீது ஜூனியர் தடகள பயிற்சியாளர் பாலியல் குற்றசாட்டை முன்வைத்து, அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அமைச்சர் சந்தீப் சிங்கின் குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்பட்டுள்ளது. அங்கு அவர் தனது தேசிய விளையாட்டு சான்றிதழ் நிலுவையில் இருப்பதாக கூறி தன்னை அழைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை இந்திய … Read more

பள்ளிகளுக்கு ஜனவரி 1 முதல் 15 வரை விடுமுறை – அரசு அறிவிப்பு

ஹரியானா பள்ளிகளுக்கு ஜனவரி 1 முதல் 15 வரை குளிர்கால விடுமுறை அறிவிப்பு. ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் ஜனவரி 1, முதல் 15 வரை குளிர்கால விடுமுறை அளிக்கப்படுவதாக என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரியத் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு, வகுப்புகள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் என்றும் கூடுதல் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களுக்கு … Read more