குருகிராம் ஹோட்டலுக்கு வந்த மாடல் அழகி.! 10 நாட்களுக்கு பின் கால்வாயில் சடலமாக மீட்பு.!

ஹரியானா, தோஹ்னாவில் உள்ள கால்வாயில் முன்னாள் மாடல் அழகி திவ்யா பஹுஜாவின் (Divya Pahuja) உடலை குருகிராம் போலீசார் மீட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 2ஆம் தேதியன்று அதிகாலை 4 மணியளவில் முன்னாள் மாடல் அழகி திவ்யா பஹுஜா, ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அதன்பிறகு அந்த ஹோட்டல் உரிமையாளர் அபிஜீத் சிங்கால் சுட்டுக் கொல்லப்பட்டார் என ஹரியானா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

4 வயது சிறுவன் மரணம் : ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. அதற்கும் மறுத்துவிட்டார்.! டிரைவர் வாக்குமூலம்.!

இந்த தகவலை அடுத்து,  விசாரணையை துவங்கிய ஹரியானா குறுகிராம் போலீசார், ஹோட்டல் சிசிடிவி காட்சிகள் என பல்வேறு வகையில் தங்கள் விசாரணையை துவங்கினர்.  அப்போது ஹோட்டல் அறையில் சுட்டுக் கொல்லப்பட்ட பஹுஜாவின் உடலை அப்புறப்படுத்த உரிமையாளர்  அபிஜீத் சிங் உள்ளிட்ட இருவர் சேர்ந்து உடலை காரில் இழுத்துச் சென்று பஞ்சாபின் மூனாக் பகுதியில் உள்ள கால்வாயில் சடலம் வீசப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து பகுஜாவின் உடலை மீட்க குருகிராம் காவல்துறையின் 6 குழுக்கள் அமைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் காவல்துறையின் பல குழுக்களும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 25 பேர் கொண்ட குழுவும் அவரது உடலை மீட்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கடந்த 5ஆம் தேதியன்று உடலை அப்புறப்படுத்த பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் காரை  மீட்டதாக குருகிராம் போலீஸார் தெரிவித்தனர். கார் பாட்டியாலா அருகே உள்ள சுங்கச்சாவடி அருகே நிறுத்தப்பட்டிருப்பது அங்குள்ள பாதுகாப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வாகனம் பாட்டியாலாவை நோக்கி ஓட்டிச் சென்றதை அறிந்து உடலை தேடியாதாக குறிப்பிட்டனர்.

அதன் பின்னர் இன்று (சனிக்கிழமை ) ஹரியானாவின் தோஹ்னாவில் உள்ள கால்வாயில் இருந்து முன்னாள் மாடல் அழகி திவ்யா பஹுஜா உடலை குருகிராம் போலீசார் மீட்டனர்.  பின்பு, பகுஜாவின் உடலின் புகைப்படம் மூலம் அவரது குடும்ப உறுப்பினர்கள் கண்டறியப்பட்டது திவ்யா பஹுஜா தான் என அடையாளத்தை உறுதிப்படுத்தினர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு, கொலை நடந்த தனியார் ஹோட்டலின் உரிமையாளரான அபிஜீத் சிங் உட்பட மூன்று பேரை குருகிராம் போலீஸார் கைது செய்தனர். பகுஜா கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பால்ராஜ் கில் கொல்கத்தா விமான நிலையத்தில் கடந்த வியாழன்று கைது செய்யப்பட்டார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.