த.மா.க யாருடன் கூட்டணி? – வரும் 12ல் முடிவு.!

GKVasan

நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில், வரும் 12-ந்தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்  ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை ஆகியவற்றில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகின்றன. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது.  இந்த … Read more

ஆளுநரை சந்தித்த ஜி.கே.வாசன்..! என்ன காரணம்..?

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் ஆளுநரை சந்தித்துள்ளார்.  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள், இன்று ஆளுநரை சந்தித்து, திருவையாறு சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 176-ம் ஆண்டு ஆராதனை விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திந்தேன்.  திருவையாறு சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 176-ம் ஆண்டு ஆராதனை விழாவில் பங்கேற்க ஆளுநருக்கு அழைப்பு விடுத்தேன். ஆளுநரின் செயல்பாடுகளை … Read more

மக்கள் மீது தமிழக அரசு மும்முனை தாக்குதல் – வாசன் குற்றசாட்டு

அரசு சொத்துவரி உயர்வு, பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு என மக்கள் மீது மும்முனை தாக்குதல் நடத்தியுள்ளது என வாசன் பேட்டி.  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள், சொத்துவரி உயர்வு, பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், அரசு சொத்துவரி உயர்வு, பால்விலை உயர்வு, மின்கட்டண உயர்வு என மக்கள் மீது மும்முனை தாக்குதல் நடத்தியுள்ளது. மழைநீர் வடிகால் பணிகள் சரியாக … Read more

தமிழக அரசு இதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் – ஜி.கே.வாசன்

பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என ஜி.கே.வாசன் அறிவுறுத்தல்.  தமிழ்நாட்டில் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடைவதாக தமிழக வேளாண் துறை அறிவித்துள்ளது. இதனையடுத்து, ஜி.கே.வாசன் அவர்கள் பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழக அரசு, விவசாயிகள் பயிர்காப்பீடு செய்வதற்கான தேதி முடிவடையும் வேளையில் அதற்கான காலக்கெடுவை நீட்டித்து விவசாயிகள் பயன்பெற வழி … Read more

தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது – ஜி.கே.வாசன்

தமிழக அரசு தஞ்சாவூர் பெரியகோயிலை எழுப்பிய மாமன்னர்  ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்தநாளான சதய விழா இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்ததற்கு ஜி.கே.வாசன் வரவேற்பு. மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஜி.கே.வாசன் அவர்களும் வரவேற்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், … Read more

எதிர்க்கட்சிகளை முடக்க நினைத்து அவர்களை கைது செய்தது தவறு – ஜி.கே.வாசன்

போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளை முடக்க நினைத்து அவர்களை கைது செய்தது தவறு என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் சென்னையில் ஏபிஎஸ் தலைமையில், போராட்டம் நடைபெற்ற நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஈபிஎஸ் உள்ளிட்டோரை பார்க்க ஜி.கே.வாசன் சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜி.கே.வாசன், சட்டசபையில் இபிஎஸ் வைத்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் … Read more

அக்டோபர் 7-ஆம் தேதி காமராஜருக்கும் மரியாதை செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை – ஜி.கே.வாசன்

மாறாக பெருந்தலைவர் பெயரை இருட்டடிப்பு செய்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜி.கே.வாசன் ட்வீட்.  பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட  – பரம்பிக்குளம் – ஆழியாறு பாசனத் திட்ட தினமான அக்டோபர் 7 ஆம் நாளில் காமராஜருக்கும் மரியாதை செய்ய வேண்டும் என ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், ‘பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட  – பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தினமான அக்டோபர் 7 ஆம் நாளில் காமராஜருக்கும் மரியாதை செய்ய வேண்டியது … Read more

ஆந்திர அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் – ஜி.கே.வாசன்

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.  பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ஏற்கனவே ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் வலியுறுத்தி இருந்த நிலையில், தற்போது ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தண்ணீர் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களோடு ஒப்புதல் இல்லாமல் ஆற்றில் எந்தவிதமான கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்ற தீர்ப்பே … Read more

கொரோனாவை விட மின்சார உயர்வு மக்களை பெரிய அளவில் பாத்திதுள்ளது – ஜி.கே.வாசன்

கொரோனாவை விட மின்சார உயர்வு மக்களை பெரிய அளவில் பாத்திதுள்ளது என ஜி.கே.வாசன் பேட்டி.  பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மரியாதை செலுத்தினார்.  அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள நிலையில், உலகளவில் தமிழர்கள் இருக்கும் இடமெல்லாம் பத்திரிகை துறையை கொண்டு சேர்த்த பெருமை டாக்டர் சிவந்தி ஆதித்தனாரையே சேரும் என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், கொரோனாவை விட மின்சார உயர்வு மக்களை … Read more

வாக்குறுதியை நம்பி வாக்களித்தவர்களுக்கு ஏமாற்றமே – ஜி.கே.வாசன்

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எத்தனை ஆண்டுகள் ஆகும் என்ற சந்தேகம் தற்போது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஆட்சிக்கு வந்த திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பேசுகையில், தேர்தல் … Read more