தமிழக அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது – ஜி.கே.வாசன்

தமிழக அரசு தஞ்சாவூர் பெரியகோயிலை எழுப்பிய மாமன்னர்  ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்தநாளான சதய விழா இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்ததற்கு ஜி.கே.வாசன் வரவேற்பு.

மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஜி.கே.வாசன் அவர்களும் வரவேற்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழக அரசு தஞ்சாவூர் பெரியகோயிலை எழுப்பிய மாமன்னர்  ராஜராஜ சோழன் அவர்களின் பிறந்தநாளான சதய விழா இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்ததை தமாக சார்பில் வரவேற்கிறோம்.’ என தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment