ஆந்திர அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் – ஜி.கே.வாசன்

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தல். 

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ஏற்கனவே ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் வலியுறுத்தி இருந்த நிலையில், தற்போது ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தண்ணீர் பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களோடு ஒப்புதல் இல்லாமல் ஆற்றில் எந்தவிதமான கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்ற தீர்ப்பே உள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஆந்திர அரசு பாலாற்றில் புதிய தடுப்பணை பணிகளை மேற்கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment