எதிர்க்கட்சிகளை முடக்க நினைத்து அவர்களை கைது செய்தது தவறு – ஜி.கே.வாசன்

போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளை முடக்க நினைத்து அவர்களை கைது செய்தது தவறு என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் சென்னையில் ஏபிஎஸ் தலைமையில், போராட்டம் நடைபெற்ற நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஈபிஎஸ் உள்ளிட்டோரை பார்க்க ஜி.கே.வாசன் சென்ற போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜி.கே.வாசன், சட்டசபையில் இபிஎஸ் வைத்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாமல் தமிழக அரசு காலம் தாழ்த்த நினைத்தது; போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளை முடக்க நினைத்து அவர்களை கைது செய்தது தவறு.

தாய்மொழி தான் முக்கியம். 3வது மொழியாக யார் வேண்டுமானாலும், எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கலாம்; இதில் கட்டுப்பாடு கிடையாது. இவ்விவகாரத்தில் வாக்கு வங்கிக்காக மத்திய அரசு மீது குற்றம் சாட்டும் செயலை, மக்கள் கவனித்து வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment