அனல் பறந்த ஆரம்ப விவாதம்..அடுத்தடுத்த தாக்கு..அதிபர் தேர்தல் அலசல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் – ஜோபிடன் இடையே முதல்முறையாக நேரடி விவாதம் தொடங்கியது. தேர்தலுக்கு முன்னதாக அதிபர் வேட்பாளர்களுக்கிடையே 3 விவாதங்கள் பல இடங்களில் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு முதல் விவாதம் ஓஹியோவில் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் ஆரம்பமே  அனல் பறக்கும் விமர்சனங்களை எல்லாம் ஜோ பிடன் முன்வைத்தார். டிரம்பின் தவறான கையாளும் திறனால் அமெரிக்காவில் 2.05 லட்சம் பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகிவிட்டனர் என்றும்  இன்னும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கொரோனா … Read more

தேர்தல் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு பணியிலிருந்தும் சி.ஏ.பி.எஃப் விடுவிப்பு… சி.ஆர்.பி.எஃப் மட்டுமே…

எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மூன்று துணை ராணுவப் படைகளை வரும் தேர்தல்கள்  உள்ளிட்ட உள்நாட்டு அனைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துவதை முழுவதுமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தேர்தல் போன்ற பணிகளிலும் எல்லை பாதுகாப்புப் படைகள் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த நடைமுறையை மாற்றி எல்லை பாதுகாப்புப் பணியில் மட்டும் இந்த துணை ராணுவப் படைகளை ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறியதாவது,  தேர்தல் பணிகள் … Read more

அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் – மத்திய அரசு முடிவு

அனைத்து தேர்தல்களுக்கும் ஒரே வாக்காளர் பட்டியலை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை தலைமைதேர்தல் ஆணையம் தயாரிக்கும் வாக்காளர் பட்டியல் மூலம்  தேர்தல்கள் நடைபெறுகின்றது.அந்தந்த மாநில தேர்தல் ஆணையங்களும் அரசியல் சாசன விதிகளின்படி  தனியாக வாக்காளர் பட்டியலை தயாரிக்கின்றது.இந்திய தேர்தல் ஆணையம் ,வாக்காளர் பட்டியலை தயாரிக்க பல்வேறு  மாநில தேர்தல் ஆணையங்களை பயன்படுத்திக்கொள்கின்றது.தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியல் மூலம் மாநிலங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும்  தேர்தல்கள் நடத்தப்படுவது வழக்கம். இதனால் … Read more

#BREAKING: எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி- முதல்வர் திட்டவட்டம் .!

இன்று  திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டத்திற்கு சென்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார். இந்நிலையில், தஞ்சையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைத்து வருகிறது. இனியும் இதே நிலைப்பாடே தொடரும், தமிழகத்தில் எப்போதும் எந்த தேர்தல் நடந்தாலும் அதிமுக தலைமையிலே கூட்டணி அமையும் என  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்தார். திருவாரூரில் இதே கேள்வியை காலையில் கேட்கப்பட்டபோது இன்னும் … Read more

மக்கள் என்னை மீண்டும் அதிபராக்குவார்கள் – அதிபர் டிரம்ப் நம்பிக்கை

மக்கள் என்னை மீண்டும் அதிபராக்குவார்கள். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதற்கிடையில் அங்கு தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வாஷிங்டனில் பேசிய அதிபர் டிரம்ப் கொரோனா தடுப்பு பணியில் அரசு மிகச்சரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், மக்களை பீதியில் வைத்திருக்க விரும்பவில்லை என்றும், நோய்த்தொற்றை தடுக்க நம்பமுடியாத வேலைகளை அரசு செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், கொரோனா தொற்றை … Read more

எளிமையின் அடையாளமான முதலமைச்சர் அதிமுக அரசு வலிமையான அரசு என்பதை நிரூபித்துள்ளார் – அமைச்சர் உதயகுமார்

எளிமையின் அடையாளமான முதலமைச்சர் அதிமுக அரசு வலிமையான அரசு என்பதை நிரூபித்துள்ளார். அமைச்சர் உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மினி பொதுத்தேர்தல் என கருதப்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் செயல்பட்டு வெற்றி பெற்றோம் என்றும், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை முன்னிறுத்தியே உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெற்றோம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அதிமுகவினர் ஒற்றுமையுடன் இருப்பதாலேயே மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. எளிமையின் அடையாளமான முதலமைச்சர், அதிமுக அரசு வலிமையான … Read more

இன்று இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிறது!

இன்று இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய இருந்த சூழலில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார்.  இந்நிலையில், இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் நேற்று தேர்தல் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் இந்த தேர்தல் நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக வாக்குச்சாவடிகளில் 8 ஆயிரம் சுகாதார பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். மாலை 4 மணி நிலவரப்படி 55 … Read more

ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்பு! அமெரிக்கா கடும் கண்டனம்!

ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா. செப்டம்பர் 6-ம் தேதி, ஹாங்காங்கில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. இந்த தேர்தலானது, சர்ச்சைக்குரிய ஹாங்காங் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா அமல்படுத்திய பின் வரும்  முதல் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்பட்டது. இந்த வார தொடக்கத்தில், ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் அவர்கள், செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த தேர்தலை மேலும் ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். … Read more

#டெல்லி டிபாசிட்#_64 வேட்பாளருக்கு ரூ.12.25 கோடி.,செலவு?அறிக்கை தாக்கல்

தலைநகர் டெல்லியில்  போட்டியிட்டு தோல்வியை தழுவிய காங்கிரஸ் கட்சியின் 64 வேட்பாளர்களுக்கு செலவு தொகையாக ரூபாய் 12 கோடியே, 25 லட்சம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டில்லி சட்டசபை தேர்தல் ஆனது கடந்த பிப்8ந் தேதி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட  64 வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியை அடைந்தனர்; ஆனால் அதில் சிலருக்கு மட்டும், ‘டிபாசிட்’ தொகை திரும்ப கிடைத்தது. இந்நிலையில்  தேர்தலில் போட்டியிட்டது தொடர்பாக  தன் கட்சி வேட்பாளர்களுக்கு செலவு செய்த … Read more

பீகாரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று! சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தொடங்குகிறது தேர்தல் ஆணையம்!

பீகாரில் கொரோனா பரவலுக்கு மத்தியில், சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தொடங்குகிறது தேர்தல் ஆணையம். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுபடுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பீஹார் மாநிலத்தில், இந்த வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலுக்காக, … Read more