தேர்தல் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு பணியிலிருந்தும் சி.ஏ.பி.எஃப் விடுவிப்பு… சி.ஆர்.பி.எஃப் மட்டுமே…

எல்லையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மூன்று துணை ராணுவப் படைகளை வரும் தேர்தல்கள்  உள்ளிட்ட உள்நாட்டு அனைத்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்துவதை முழுவதுமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தேர்தல் போன்ற பணிகளிலும் எல்லை பாதுகாப்புப் படைகள் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த நடைமுறையை மாற்றி எல்லை பாதுகாப்புப் பணியில் மட்டும் இந்த துணை ராணுவப் படைகளை ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் கூறியதாவது,  தேர்தல் பணிகள் மற்றும் உள்நாட்டில் பாதுகாப்பு பணிகளில் சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை மட்டுமே ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.எல்லை பாதுகாப்புப் படைகள் எல்லை பாதுகாப்புப் பணிகளில் மட்டுமே ஈடுபடுத்தப்படும். பீஹாரில் விரைவில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் இருந்து இதை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படைகளை வலுப்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் உள்ளன. மேலும்,  இந்தப் படைகளுக்கு தேவையான புதிய தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்த ஆலோசனை குழு அமைக்கப்பட உள்ளது..

author avatar
kavitha