தென்மேற்கு பருவமழை தென்தமிழக பகுதிகளில் தொடங்கியது!சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவிதுள்ளதில் ,தென்தமிழகம் மற்றும் அதைஒட்டியுள்ள பகுதிகளில் தென் மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது. தென் கிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து வடகேரளா மற்றும் கர்நாடக கடல் பகுதிகளில் நிலை கொண்டு உள்ளது. இதேபோல் மத்திய கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. மேலும், … Read more

ரவுடியிடம் லஞ்சம் கேட்ட விவகாரம்:காவல்துறை உதவி ஆணையர் முத்தழகு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

ரவுடியிடம் லஞ்சம் கேட்டதாக, தொலைபேசி உரையாடல் வெளியான விவகாரத்தில் சிக்கிய காவல்துறை உதவி ஆணையர் முத்தழகு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இணையதளத்தில் சென்னை தேனாம்பேட்டை உதவி ஆணையர் முத்தழகு குற்றவழக்கில் சிக்கியவரிடம் லஞ்சம் கேட்டது என்று கூறி வெளியிடப்பட்ட ஆடியோ ஒன்று வைரலானது. ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் வாரிசான கார்த்திக் சேதுபதி கடத்தப்பட்டு சொத்து அபகரிக்கப்பட்ட வழக்கில் ராக்கெட் ராஜாவின் கூட்டாளிகள் பிரகாஷ், ராஜா சுந்தர் மற்றும் சுந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். … Read more

சமூகவிரோதிகள் ஊடுருவும் வரை உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது?தினகரன்

சமூகவிரோதிகள் ஊடுருவும் வரை உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்று  தினகரன் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,தூத்துக்குடி சம்பவத்திற்கு அரசின் இயலாமையே காரணம்.போராட்டத்திற்கு அனுமதி அளித்துவிட்டு 144 தடை உத்தரவு போட்டது ஏன்?மேலும் சமூகவிரோதிகள் ஊடுருவும் வரை உளவுத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்று  தினகரன் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல்  சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் எம்எல்ஏ டிடிவி தினகரன் பேச்சைக் கண்டித்து அமளியில் ஈடுபட்டனர். அரசுக்கு நெருக்கடி கொடுக்க கட்சிகள் திட்டமிட்டதாக கூறுவது … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு:சட்டமன்றத்தில் பேச அனுமதிக்காத சபாநாயகரை கண்டித்து அபூபக்கர் எம்.எல்.ஏ., தர்ணா!

இன்று சட்டமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் குறித்து ஒத்தி வைப்பு தீர்மானத்தை தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இந்த ஒத்திவைப்பு தீர்மானத்தின் மீது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கருக்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனைத்தொடர்ந்து அவர் புறக்கணித்தார். பின்னர் செய்தியாளர் களிடத்தில் கூறியதாவது:- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் படுகொலையை கண்டிக்கும் வகையில் சட்டமன்றத்தில் … Read more

நாளை பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது!

நாளை காலை 9 மணிக்கு பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இணைய தளம் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்விற்கான தேர்வு முடிவுகள் 30ஆம் தேதி காலை 09.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்கள் மூலமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், ஆண்டினை பதிவு செய்து, தேர்வு … Read more

துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக பேரவையில் முதல்வர் 1.15 மணி நேரம் விளக்கம்! வாய்ப்பு தரவில்லை என காங்கிரஸ் வெளிநடப்பு !

துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக பேரவையில் முதல்வர் 1.15 மணி நேரம் விளக்கம் அளித்துள்ளார்.முதல்வர் விளக்கத்துக்கு வாய்ப்பு தரவில்லை என கூறி பேரவையில் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தனர். இதேபோல் பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு: திமுகவும் பேரவையில் இருந்து வெளியேறியது, சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின்,அவர் கூறுகையில், ஆலை மூடல் தொடர்பாக அமைச்சரவை கூடி கொள்கை முடிவு எடுக்க வேண்டும் .துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் … Read more

சிபிஎஸ்இ  10-ம் வகுப்பு தேர்வில் 86.7% மாணவர்கள் தேர்ச்சி !

சிபிஎஸ்இ  10-ம் வகுப்பு தேர்வில் 86.7% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.சென்னையில் 97.37%, திருவனந்தபுரத்தில் 99.60% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் 4 மாணவர்கள் 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்கள் – 88.67%, ஆண்கள் – 85.32%. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. நாடு முழுவதும் மொத்தம் 16.38 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினர்.தமிழகத்தில் இருந்து 20 ஆயிரம் மாணவர்கள் … Read more

பலத்த காற்றுடன் தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றம்!

தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் பலத்த காற்றுடன், கடல் சீற்றமாக காணப்படுகிறது. கேரளா மற்றும் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு பெருமளவு மழையைக் கொடுக்கும் தென்மேற்கு பருவமழை மே கடைசி வாரத்தில் தொடங்குகிறது. இந்த ஆண்டில் சரியான நேரத்தில் தொடங்கியுள்ள பருவமழை அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த 26ம் தேதி தொடங்கியது. கேரளாவில் திருவனந்தபுரம், புனலூர், கொல்லம், ஆலப்புழா உள்ளிட்ட இடங்களில் மாலை முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பருவமழை … Read more

BREAKING NEWS:ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பான அரசாணை சட்டப்படி செல்லும்! சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகே அரசாணை!முதலமைச்சர் பழனிசாமி

பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அறிக்கை: ஸ்டெர்லைட் ஆலை மூடல் தொடர்பான அரசாணை சட்டப்படி செல்லும் என்று  பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.  சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பிறகே அரசாணை வெளியிடப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அறிக்கையில், போராட்டக்குழுவினருடன் சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சேர்ந்ததால் பிரச்சனையில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர். கண்ணீர் புகைகுண்டு, தடியடிக்கும் கலைந்து செல்லாத காரணத்தினால் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அமைச்சர்கள் நேரில் … Read more

ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி பேரவை நடத்த முடிவு!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை போட்டி சட்டமன்றம் திமுக அறிவித்துள்ளது. பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியது: துப்பாக்கிச்சூடு என்ற வார்த்தை முதலமைச்சரின் அறிக்கையில் எந்த இடத்திலும் இல்லை” என்று பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேரவையில் கூறுகையில், “துப்பாக்கிச்சூடு குறித்து வேதனை தெரிவிக்க முதலமைச்சருக்கு 5 நாட்கள் தேவைப்பட்டது” என்றும் வருத்தம் தெரிவித்தார். போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்” .”சீருடை அணியாத போலீசாரும் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர்” .துப்பாக்கிச்சூடு … Read more