அடக்குமுறையின் மூலம் எதிர்கட்சியினரை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது – கே.எஸ்.அழகிரி

ksalagiri

நேற்று நாடாளுமன்றத்திற்குள் 2 பேர் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்றது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக கைதான 4 பேரையும், 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறைக்கு பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஜனநாயகத்தை சஸ்பெண்ட் செய்ததற்கு ஒப்பானது … Read more

எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஜனநாயகத்தை சஸ்பெண்ட் செய்ததற்கு ஒப்பானது – மல்லிகார்ஜுனே கார்கே

Congress Leader Mallikarjun Kharge invited meeting INDIA Alliance Parties

நடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவைக்குள் நேற்று அத்துமீறி உள்ளே நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்றது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்  தெரிவித்து வருகின்றனர். ஒரேநாளில் கனிமொழி உட்பட 15 எம்பிக்கள் சஸ்பெண்ட்… மக்களவையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! அந்த … Read more

அமித்ஷா வரலாற்றை மாற்றி எழுதும் பழக்கம் கொண்டவர் – ராகுல் காந்தி

rahul gandhi

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்து குறித்து, ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பண்டித நேரு இந்தியாவுக்காக உயிரைக் கொடுத்தார், அவர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்தார். அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது. அவருக்கு வரலாறு தெரிய வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. ஏனெனில் அவர் அதை மாற்றி எழுதும் பழக்கம் கொண்டவர். காங்கிரஸ் எம்.பி. தீரஜ் … Read more

காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹுவுக்கு சொந்தமான இடங்களில் இருந்து கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்..!

Dheeraj

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த  சோதனையில் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் கருப்பு பணம் மீட்கப்பட்டு உள்ளது. தீரஜ் சாஹூவுடன் தொடர்புடைய ஒடிசாவைச் சேர்ந்த மதுபான ஆலையின் பல தொழிற்சாலைகளில் இருந்து கிட்டத்தட்ட ரூ.300 கோடிக்கும் அதிகமான பணத்தை  வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாலாரிகிர், திட்லாகர் மற்றும் சம்பல்பூர் தொழிற்சாலைகளில் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகளின் … Read more

‘விளைவுகளை சந்திக்க நேரிடும்’ – கேரள முதல்வர் எச்சரிக்கை..!

Pinarayi vijayan

கேரளாவில் நவ கேரள சதாஸ் என்ற யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அதாவது கேரள மாநிலத்தில் அரசின்  சாதனைகளை மக்களுக்கு நேரில் சென்று எடுத்துரைக்கும் வண்ணம் இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது. இதற்காக பேருந்துகளில் கேரள முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பயணித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த மாதம் இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் இந்த யாத்திரைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நேற்று பெரும்பாவூரில் இருந்து கொத்தமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த முதல்வர் பினராயி … Read more

ஐடி ரெய்டில் சிக்கிய 300கோடி… எம்.பி தீரஜ் சாஹுவிடம் விளக்கம் கேட்ட காங்கிரஸ்..!

ராஞ்சியில் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் குமார் சாகு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் ரூ.300 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது.  வருமான வரித்துறை (ஐடி) துறையினர் நடத்திய சோதனையின் போது ரூ.300 கோடி மீட்கப்பட்டதையடுத்து, ராஜ்யசபா உறுப்பினர் தீரஜ் சாஹுவிடம் காங்கிரஸ் விளக்கம் கேட்டுள்ளது. காங்கிரஸ் ஜார்க்கண்ட் பொறுப்பாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) உறுப்பினர் அவினாஷ் பாண்டே ராஞ்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, இது அவருடைய கூட்டுக் குடும்பத்தின் கூட்டுத் தொழில். அந்த குடும்பம் 100 … Read more

இதே விஷயத்தை காங்கிரஸ் செய்தால் பாஜகவினர் கூச்சலிட்டிருப்பார்கள்.. அசோக் கெலாட் விமர்சனம்.!

Rajasthan Ex CM Ashok Gehlot

5 மாநில தேர்தல் முடிந்து அதன் முடிவுகளும் கடந்த ஞாயிற்று கிழமையே வெளியாகிவிட்டது. அதில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என 3 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக ரேவந்த் ரெட்டி அறிவிக்கப்பட்டு மாநில முதல்வராக பதவி ஏற்றுவிட்டார். மிசோரம் மாநிலத்தில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்று லால்டுஹோமா முதலமைச்சராக பொறுப்பேற்று விட்டார். ஆனால் 3 மாநில ஆட்சியை பிடித்த பாஜக இன்னும் முதல்வரை … Read more

காங்கிரஸ் எம்பி வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய ரூ.200 கோடி பணம்.? பிரதமர் மோடியின் உத்தரவாதம்.!  

Congress MP Dhiraj sahu - PM Modi

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் (Rajya saba MP) தீரஜ் சாஹு (Dhiraj sahu ) வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.  இந்த சோதனையானது ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் தொடர்ந்தது. இது ஒரு ஜனநாயகப் படுகொலை – மம்தா பானர்ஜி இந்த 3 நாள் அமலாக்கத்துறை சோதனையில் தீரஜ் சாஹு தொடர்புடைய இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எவ்வளவு பணம் என்பது இன்னும் உறுதியாக … Read more

தெலுங்கானா முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி..!

Chandrasekara rao

தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ்  அவர்கள் தனது வீட்டில் தவறி விழுந்துள்ளார்.  விழுந்ததில் அவருக்கு இடுப்பு எழுப்பு முறிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெலுங்கானாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், கே சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி வெற்றியை எதிர்பார்த்த நிலையில், காங்கிரஸ் வெற்றி கனியை பறித்தது. தேர்தல் வெற்றி.! மத்திய அமைச்சர்கள் ராஜினாமா.! அமைச்சரவையில் திடீர் மாற்றம்.!  119 உறுப்பினர்களை … Read more

தெலுங்கானா முதல்வராகும் ரேவந்த் ரெட்டி.! விழா ஏற்பாடுகள் தீவிரம்.!

Congress MP Rahul gandhi - Telangana CM Revanth Reddy

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. அதுவும் தெலுங்கானா தனி மாநிலமாக பிரிந்து கடந்த 10 வருடங்களாக ஆட்சி செய்து வந்த முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியை தோற்கடித்து காங்கிரஸ் முதன் முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பொறுப்பேற்க … Read more