ஒடிசா – அசாம் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் – நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

pm modi

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் அனைத்து மாநில கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாதம் இறுதி அல்லது மார்ச் மாதம் வெளியாகும் என்றும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தேர்தல் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தலுக்கான பணிகள் மும்மரமாக நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடி ஒடிசா – அசாம் மாநிலங்களுக்கு இன்றும், நாளையும் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, இன்று ஒடிசா … Read more

காங்கிரஸ் எம்பி வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய ரூ.200 கோடி பணம்.? பிரதமர் மோடியின் உத்தரவாதம்.!  

Congress MP Dhiraj sahu - PM Modi

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் (Rajya saba MP) தீரஜ் சாஹு (Dhiraj sahu ) வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.  இந்த சோதனையானது ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் தொடர்ந்தது. இது ஒரு ஜனநாயகப் படுகொலை – மம்தா பானர்ஜி இந்த 3 நாள் அமலாக்கத்துறை சோதனையில் தீரஜ் சாஹு தொடர்புடைய இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எவ்வளவு பணம் என்பது இன்னும் உறுதியாக … Read more

பூர்வீகம் தமிழ்நாடு.. அரசியல் பிரவேசம் ஒடிசா.! ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனின் அடுத்த நகர்வு.!

Retired IAS Officer VK Pandian

தமிழகத்தை சேர்ந்த வி.கே.பாண்டியன், 2000ஆம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்து, அதன் பின்னர் பல்வேறு குடிமை பணிகள் நிறைவு செய்து 2011ஆம் ஆண்டு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிப்பட்ட செயலாளாராக பணியாற்ற துவங்கினார். அப்போது முதலே முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு மிகவும் நெருங்கிய அரசு அதிகாரியாக மாறினார். விரைவில் தனது அரசு பதவியை ராஜினாமா செய்து  ஒடிசாவில்ஆளும் பிஜேடி-யிடம் சேருவார் என கூறப்பட்டது. அதற்கேற்றாற்போல , ஒடிசாவில் அனைத்து தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று அங்கு மக்கள் … Read more

ரஷ்ய தொழிலதிபர் இந்தியாவில் உயிரிழப்பு.! பிறந்தநாள் கொண்டாட வந்தவருக்கு நேர்ந்த சோகம்.!

ஒடிசாவில் உள்ள தனியார் ஹோட்டலில் ரஷ்ய தொழிலதிபரும், அரசியல்வாதியுமான பாவல் அண்டவ் உயிரிழந்தார். ஒடிசாவில் உள்ள தனியார் ஹோட்டலில் ரஷ்ய தொழிலதிபரும், அரசியல்வாதியுமான பாவல் அண்டவ் என்ற 65வயதான நபர் தனது பிறந்தநாள் விடுமுறையை கொண்டாட இந்தியா வந்துள்ளார் . இந்நிலையில், அவர் கடந்த சனிக்கிழமை அன்று தான் தங்கியிருந்த ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பாவல் அண்டவ் உயிரிழப்பதற்கு முன்னர் … Read more

திருமணம் செய்துக்கொள்ள சம்மதிக்காத காதலி..! காதலனின் வெறிச்செயல்..!

குஜராத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நபர் தனது காதலியை 49 முறை கத்தியால் குத்தினார். குஜராத்: ஒடிசாவில் உள்ள புவனேஸ்வரைச் சேர்ந்த நபர் ஜகந்நாத் கோடா. இவர் குனிடர் சீமாதாஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலிக்கும் நிலையில் கோடா தனது காதலி சீமாதாஸிடம் நம் திருமண செய்துகொள்வோம் என்று கேட்டுள்ளார். அதற்கு சீமா ஒப்புக்கொள்ளாமல் தாமதப்படுத்தி உள்ளார். மீண்டும் மீண்டும் திருமணம் பற்றி கேட்டும் அவர் மறுத்த நிலையில் கோபமடைந்த கோடா, சீமாவைத் தன்னுடன் … Read more

கால்பந்து விளையாட்டின் போது பரிதாபம் – மின்னல் விழுந்து 2 பேர் பலி, 21 பேர் காயம்!!

ஒடிசாவில் உள்ளூர் கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கியதில் 2 பேர் பலி, மற்றும் 21 பேர் காயமடைந்துள்ளனர். ஒடிஷாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள பனீலாட்டாவில் நடைபெற்ற உள்ளூர் கால்பந்து விளையாட்டு போட்டியின் போது மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், உயிரிழந்தவர்களின் ஒருவர் கால்பந்து வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் 21 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பார்வையாளர்களில் பெரும்பாலானோர் காயமடைந்துள்ளனர். போலீசார் இது குறித்து பேசும் போது காயமடைந்தவர்கள் ரூர்கேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக … Read more

இறால் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு.. 28 தொழிலாளர்களுக்கு உடல் நலக்குறைவு..

பாலசோர் இறால் ஆலையில் திடீரென அம்மோனியா வாயு கசிந்ததில் 28 தொழிலாளர்கள் உடல் நலக்குறைவு அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் இருந்து புதன்கிழமை(செப் 28) கசிந்த அம்மோனியா வாயுவை சுவாசித்ததால் 28 தொழிலாளர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் ஹைலேண்ட் அக்ரோ ஃபுட் பிரைவேட் லிமிடெட் இறால் தொழிற்சாலையினுள் அமோனியா வாயுவால் பாதிக்கப்பட்டிருந்த 28 … Read more

பாஜக குடியரசு தலைவர் வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.! மனதை கேட்டு வாக்களித்ததாக பேட்டி.!

ஒடிசா மாநிலம் பாராபதி-கட்டாக் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்ததாக வெளிப்படையாக கூறியுள்ளார்.  இன்று  குடியரசு தலைவர் தேர்தல் நாடுமுழுவதும் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. ஆளும் பாஜக கூட்டணி சார்பில் ஒடிசாவை சேர்ந்த திரௌபதி முர்மு அவர்களும், எதிர்க்கட்சி காங்கிரஸ் கூட்டணி சார்ப்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். இதில் ஆளுங்கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கு தான் வெற்றி ஏறக்குறைய உறுதி என்றாலும், அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சரியாக வாக்களித்து, சில நடுநிலை கட்சிகளும் ஆதரவளித்தால் … Read more

#Justnow:இன்று முதல் பள்ளி வகுப்புகள் நேரம் மாற்றம் – அரசு முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில்,பல்வேறு மாநிலங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டையும் தாண்டி வெப்பம் அதிகரித்துள்ளது.இதனால்,வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில்,மாநிலத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் கற்பிக்கும் நேரத்தை மாற்ற ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி,ஒடிசா அரசின் பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி,இன்று முதல் பள்ளிகளில் கற்பித்தல் நேரத்திற்கான புதிய நேரம் காலை 6 மணி முதல் 9 மணி … Read more

ஒடிசா : விழாவில் விருந்து சாப்பிட்ட 40 பேர் உணவு விஷமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதி …!

ஒடிசாவில் உள்ள பத்ரக் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் விருந்து போடப்பட்டுள்ளது. இந்த விருந்தில் போடப்பட்ட உணவை சாப்பிட்ட 40க்கும் மேற்பட்டோர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்களது உணவு விஷமாகியதன் காரணமாக தான் இவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.