பாஜக குடியரசு தலைவர் வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.! மனதை கேட்டு வாக்களித்ததாக பேட்டி.!

ஒடிசா மாநிலம் பாராபதி-கட்டாக் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்ததாக வெளிப்படையாக கூறியுள்ளார். 

இன்று  குடியரசு தலைவர் தேர்தல் நாடுமுழுவதும் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. ஆளும் பாஜக கூட்டணி சார்பில் ஒடிசாவை சேர்ந்த திரௌபதி முர்மு அவர்களும், எதிர்க்கட்சி காங்கிரஸ் கூட்டணி சார்ப்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர்.

இதில் ஆளுங்கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கு தான் வெற்றி ஏறக்குறைய உறுதி என்றாலும், அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சரியாக வாக்களித்து, சில நடுநிலை கட்சிகளும் ஆதரவளித்தால் யஷ்வந்த் சின்ஹா வெற்றிபெற வாய்ப்பு இருந்தது.

ஆனால், ஒடிசா மாநிலம் பாராபதி-கட்டாக் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்ததாக வெளிப்படையாக கூறி எதிர்க்கட்சி தரப்புக்கு அதிர்ச்சியளித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘ நான் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆனால் பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளேன். மண்ணுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எனது மனதை கேட்டு நான் வாக்களித்தது எனது தனிப்பட்ட முடிவு, அதனால்தான் அவருக்கு வாக்களித்தேன்.’ என கூறியுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment