அடக்குமுறையின் மூலம் எதிர்கட்சியினரை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது – கே.எஸ்.அழகிரி

நேற்று நாடாளுமன்றத்திற்குள் 2 பேர் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்றது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக கைதான 4 பேரையும், 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறைக்கு பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஜனநாயகத்தை சஸ்பெண்ட் செய்ததற்கு ஒப்பானது – மல்லிகார்ஜுனே கார்கே

இதற்கிடையில், இன்று மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்  தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள், மக்களவையில் ஜனநாயகக் குரல் எழுப்பிய மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. அடக்குமுறையின் மூலம் எதிர்கட்சியினரை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. எங்கள் குரல் மக்களுக்காக ஒலித்துக்கொண்டே இருக்கும்.’ என தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.