எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஜனநாயகத்தை சஸ்பெண்ட் செய்ததற்கு ஒப்பானது – மல்லிகார்ஜுனே கார்கே

நடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்து மக்களவைக்குள் நேற்று அத்துமீறி உள்ளே நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அத்துமீறல் நடைபெற்றது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்  தெரிவித்து வருகின்றனர்.

ஒரேநாளில் கனிமொழி உட்பட 15 எம்பிக்கள் சஸ்பெண்ட்… மக்களவையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே அவர்கள், எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மீறல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என கோரியதற்காக 15 எதிர்க்கட்சி எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஜனநாயகத்தை சஸ்பெண்ட் செய்ததற்கு ஒப்பானது.

அவர்கள் செய்த குற்றம் தான் என்ன?; உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவையில் விளக்கமளிக்க வலியுறுத்தியது குற்றமா?; பாதுகாப்பு மீறல் குறித்து விவாதம் நடத்த கோரியது குற்றமா?; இந்த நடவடிக்கை சர்வாதிகாரத்தின் கொடூரமான தன்மையைக் காட்டவில்லையா?’  என கேள்வி எழுப்பியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.