மிக்ஜாம் புயல் பாதிப்பு: தொழிலதிபராக முன் வந்து நிதி வழங்கிய சூரி.!

மிக்ஜாம்புயல் சென்னையைத் தாக்கி ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்டது, நகரம் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் சமூக நிதியுதவி அளித்து வருகின்றனர்.

முன்னதாக நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த லிஸ்டில் சமீபத்திய நடிகர் சூரி இணைந்துள்ளார். தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு (சிஎம்பிஆர்எஃப்) ரூ.10 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இந்த ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்கள்! முதலிடத்தில் எந்த படம் தெரியுமா?

இது தொடர்பாக, உதியநிதி தனது X தள பக்கத்தில்,  திரைப்பட நடிகர் அண்ணன் சூரி அவர்கள் மதுரை அம்மன் உணவகம் சார்பில், வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ‘தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதி’க்கு ரூ.10 லட்சம் காசோலையை வழங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நடிகராக இல்லாமல், தொழிலதிபராக முன் வந்து நிதியுதவி செய்தது அனைவரையும் ஈர்த்துள்ளது. இந்த நிதி அளிக்கும் திரையுலக பிரபலங்களின் லிஸ்டில் முதல் ஆளாக, நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் மிக்ஜாம் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கினர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.