இடா புயல்: நியூயார்க்கில் மழை வெள்ளத்தால் 7 பேர் பலி..!

இடா புயல் காரணமாக நியூயார்க்கில் நேற்று இரவு பெய்த கனமழை காரணத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தை இடா புயல் தாக்கியது. இந்த புயலின் தாக்கத்தால் வீடுகள், நகரங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இந்த புயலின் தாக்கத்திற்கு பின்னர் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நேற்று இரவு முதல் பலத்த கனமழை பெய்து வருகிறது. … Read more

ஒரே நாளில் ஒரு கோடி – இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த பில்கேட்ஸ்!

ஒரே நாளில் 1 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி மருந்துகளை செலுத்திய இந்தியாவுக்கு பில் கேட்ஸ் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரு நாளில் ஒரு கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. அதாவது, நேற்று மட்டும் இந்தியா முழுவதும் 1,03,35,290 பேருக்கு கொரோன தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது கடந்த ஜனவரி 16 அன்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து. நேற்று தான் அதிகபட்ச ஒற்றை … Read more

காபூல் விமான நிலைய இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா!

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் முகாம்கள் மீது ஆளில்லா ட்ரான்கள் மூலம் அமெரிக்கா தாக்குதல். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து, தலிபான் ஆட்சிக்கு எதிரான மக்கள், வெளிநாட்டு மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் ஏரளனமானோர் கூடி வருகின்றனர். இதனிடையே, அமெரிக்க படைகள் படிப்படியாக தாயகம் திரும்பி வருகிறது. இம்மாதம் இறுதிக்குள் படைகளை திரும்ப பெற வேண்டும் என தலிபான் அமைப்பினர் காலக்கெடு விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி … Read more

அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் மிதமான நிலநடுக்கம்..!

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று ஹோண்டுராஸில் உள்ள பினலேஜோ என்ற பகுதியிலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

அமெரிக்க துணை அதிபர் ஆசிய நாடுகளுக்கு பயணம்..!

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆசிய நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.  ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தற்போது ஆட்சியை கைப்பற்றியுள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பின் ஒரே வாரத்தில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு பயணத்தை மேற்கொள்கிறார். இன்று காலை அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிஸ் சிங்கப்பூர் சென்றுள்ளார். நாளை … Read more

அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். திட்டம்? – அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை!

அமெரிக்க அரசாங்கப் பிரதிநிதியின் தனிப்பட்ட அறிவுறுத்தல்கள் இல்லாமல் காபூல் விமான நிலையத்திற்கு பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தல். ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அரசு குழுவுக்கு எதிரான பாதுகாப்பு நிலைமை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது குழு நேற்று வாசிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்தியது. துணைத் தலைவர் கமலா ஹாரிஸ் சிங்கப்பூர் பயணத்தின் போது பாதுகாப்பான காணொளி வாயிலாக ஆலோசனையில் கலந்துகொண்டார். இந்த ஆலோசனையில், மாநில … Read more

அமெரிக்காவில் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி?

அமெரிக்காவில் இரண்டாவது தவணை தடுப்பூசிக்கு 8 மாதம் பின்னர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகமான பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் முதல் இடத்தில் உள்ளது அமெரிக்கா. இந்த நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இங்கு டெல்டா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணத்தால் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு வல்லுநர்கள் பரிந்துரை செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. டெல்டா வைரஸிலிருந்து காப்பதற்கு … Read more

50% மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்-வெள்ளை மாளிகை..!

அமெரிக்காவில் 50% மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதித்த நாடுகளில் முதல் இடத்தை வகிப்பது அமெரிக்கா. இந்நிலையில் அங்கு தற்போது 50 சதவீத அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் கொரோனா தரவு இயக்குனர் சைரஸ் ஷாபார் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்காவில் 50% அமெரிக்கர்கள் முழுமையாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர். இதே முறையை … Read more

டெக்சாஸ் மாகாணத்தில் அகதிகள் சிற்றுந்து விபத்து-10 பேர் பலி..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அகதிகள் சிற்றுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் சிற்றுந்து ஒன்று என்சினோ என்ற பகுதியில் அளவுக்கு அதிகமாக 29 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது சிற்றுந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். கடந்த புதன்கிழமை அன்று நடந்த இந்த சம்பவத்தில் ஓட்டுநர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து கூறிய அதிகாரிகள் 15 பேர் செல்லக்கூடிய சிற்றுந்தில் 29 பேர் … Read more

இந்தியாவிற்கு தடுப்பூசி உற்பத்திக்கு உதவி, அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு..!

இந்தியாவிற்கு தடுப்பூசி உற்பத்திக்கு உதவுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். உலக நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தடுப்பூசி போடும் பணி  விரைவாக நடந்து வருகிறது. மேலும், உலக நாடுகளில் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக போராடி வரும் நாடுகளுக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி இது குறித்து பேசியதாவது, உலகம் முழுவதும் பல நூறு கோடி கொரோனா தடுப்பூசி … Read more