அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் மிதமான நிலநடுக்கம்..!

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று ஹோண்டுராஸில் உள்ள பினலேஜோ என்ற பகுதியிலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது.

மேலும், நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.