மாநாட்டை கைப்பற்றிய முன்னணி டிவி சேனல்.! நிஜமான டைம் லூப் இனி தான் ஆரம்பம்.!

மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி கைப்பற்றியுள்ளதாம். மாநாடு திரைப்படம் சாட்டிலைட் உரிமம் விற்கப்படாமல் கடைசி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டதால், அதன் ரிலீஸ் தேதியே மாற்றியமைக்கும் சூழல் உருவானது. அப்போது தக்க நேரத்தில் தன்னுடைய மகனுக்காக மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமத்துக்கான தொகையை கொடுத்து படத்தை ரிலீஸ் செய்ய உதவினார் டி.ஆர். தற்போது மாநாடு திரைப்படத்திற்கு அனைத்து இடங்களில் இருந்தும் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால், தற்போது மாநாடு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்துக்கு பலத்த … Read more

நேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் யோகி பாபுவின் ‘மண்டேலா’.!

யோகி பாபுவின் மண்டேலா படம் நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் ,காமெடியனாகவும் கலக்கி வருபவர் யோகி பாபு.அவ்வாறு அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களில் ஒன்று மண்டேலா.மடோனா அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படத்தினை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தயாரித்துள்ளார்.சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், டாய்லட் படத்தில் நடித்த ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய பரத் சங்கர் இசையமைத்துள்ளார் . இந்த … Read more

ரிப்பீட் எல்லாம் ஸ்டாப்பு, ஒரிஜினல் இப்போ ஸ்டாட்டு.!புதிய அத்தியாயங்களுடன் மீண்டும் வரும் விஜய் டிவி தொடர்கள்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் புதிய அத்தியாயங்கள் வரும் ஜூலை 27ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் உள்ள இல்லத்தரசிகளுக்கு சீரியல்கள் என்றாலே மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்று. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் மூலம் சீரியல்கள் எதுவும் ஓடவில்லை. சமீபத்தில் தமிழக அரசு 60பேருடன் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சீரியல் படப்பிடிப்புகளை தொடங்க அனுமதி வழங்கியது. ஆனால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு … Read more

கண்ணாடி முன்னாடி செல்ஃபி எடுத்த பிக்பாஸ் காதல் ஜோடி !

கண்ணாடி முன்னாடி செல்ஃபி எடுத்த பிக்பாஸ் 3 காதல் ஜோடி கவின் மற்றும் லாஸ்லியா .  2019ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 தமிழ் என்ற நிகழ்ச்சியில் முகின், சாண்டி, கவின், லாஸ்லியா, சேரன், கஸ்தூரி சங்கர், வனித்தா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முகின் ராவ் முதல் இடத்தையும் சாண்டி மாஸ்டர் இரண்டாம் இடத்தையும் பிடித்த வெற்றி பெற்றனர். இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான காதலர்களாக பிரபலமானவர்கள் … Read more

நீங்களும் ரகசிய திருமணமா? திடீர் ஷாக் கொடுத்த சுந்தரன் நீயும் சுந்தரன் நானும் கதாநாயகன்!

பிரபலமான தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகும் சுந்தரன் நீயும் சுந்தரன் நானும் எனும் முன்னணி சீரியலில் கதாநாயகனாக நடிப்பவர் தான் வினோத் பாபு. இவர் தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாப்பக்கத்தில் காதலர் தின வாழ்த்துக்கள் தெரிவித்த இவர், தற்போதும் அவர் திருமணம் முடிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தின வாழ்த்துக்கள் கூறியுள்ளார். இதனால் சகல மக்களுக்கும் தெரியவருவது … Read more

அந்த சர்ப்ரைஸ் எனக்கு ஏற்கனவே தெரியும்! பிக்பாஸ் பற்றி உளறி மாட்டிக்கொண்ட தர்ஷன்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மூன்றாவது சீசன் மூலம் மிகவும் பிரபலமானவர் தர்ஷன். இவர்தான் போட்டியின் வெற்றியாளராக இருப்பார் என கணிக்கப்பட்டது. கடைசிக்கு முந்தைய வாரம் வரை இவர் அந்த போட்டியில் இடம்பெற்றிருந்தார். யாரும் எதிர்பாரத வண்ணம் இவர் வெளியேற்றப்பட்டார். இந்த வெளியேற்றம் பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. பின்னர், வெளியேறியபோது தர்ஷனுக்கு கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன்-2 திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கமலஹாசன் மூலமாககிடைத்தது.  இதனை மேடையில் கமல் முதன் முதலாக தர்ஷனிடம் … Read more

பிக் பாஸ் மதுமிதா திடீர் செய்தியாளர்கள் சந்திப்பு! பரபரப்பு பேட்டி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தானாக வெளியேறினார் போட்டியாளர் மதுமிதா. இதற்கான காரணம் இன்னும் சரிவர தெரியவில்லை. பிக் பாஸ் வீட்டினுள் தற்கொலை முயற்சி செய்ததால் அவர் வெளியேற்றபட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நேற்று, விஜய் டிவி சார்பில், மதுமிதா சம்பள பணத்தை தராவிட்டால் தற்கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக இன்று  செய்தியாளர்களை சந்தித்த மதுமிதா, ‘ எனக்கு கொடுக்க வேண்டிய … Read more

பணம் தராவிட்டால் தற்கொலை செய்துவிடுவதாக மதுமிதா மிரட்டல்! விஜய் டிவி போலீசில் திடீர் புகார்!

பிக் பாஸ் போட்டி மூன்றாவது சீசன், விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இந்த போட்டியில் வாராவாரம் எலிமினேட் செய்து வருவது வழக்கம். இதில் போட்டியாளர் சரவணன் திடீரென பிக் பாஸ் நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் சென்ற வாரம் மதுமிதா, தன் கையை அறுத்துக்கொண்டதால் பிக் பாஸ் நிர்வாகத்தால் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் கிண்டி காவல் நிலையத்தில், மதுமிதா மீது விஜய் டிவி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘ மீதம் உள்ள சம்பளபாக்கியை தராவிட்டால் தான் … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸில் முற்றுகிறதா பனிப்போர்?! இதில் யார்தான் ஹீரோயின்?!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வெற்றிகரமான தொடர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தொலைகாட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான தொடர் என்ற பெருமை கொண்டது. கூட்டு குடும்பத்தை பெருமையாக சொல்லும் இந்த சீரியலில் நடிப்பவர்களிடையே யார் ஹீரோயின் என பனி போரே நடந்து வருகிறதாம்.   சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில், சிறந்த நடிகைக்கான நாமினேஷனில் அந்த சீரியலில் சித்ரா ( முல்லை ) பெயர் வந்தது. துணை நடிகை பிரிவில் சித்ரா ( தனலட்சுமி) பெயர் வந்தது. … Read more

மீண்டும் உதயமாகும் விஜய் டிவியின் லொள்ளு சபா….!!!

விஜய் டிவியின் லொல்லு சபா நிகழ்ச்சி மீண்டும் வரவுள்ளது. முதல் படமாக தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை கலாய்க்க உள்ளார்கள். விஜய் டிவியின் லொல்லு சபா நிகழ்ச்சி மீண்டும் வரவுள்ளதாம். அதனை கலக்கப்போவது யாரு இயக்குனர் சாம்சன் இயக்க உள்ளார். இதில் அமுதவானன்  மற்றும் நந்தினி ஆகியோர் ஹீரோ ஹீரோயினாக நடிக்க உள்ளார்கள். முதல் லொல்லு சபாவில் சந்தானம் ஹீரோவாக தமிழ் படங்களை கலாய்த்தும் அதனை ‘தில்லுக்கு துட்டு’ இயக்குனர் ராம்பாலா இய்க்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. … Read more