அன்பழகன் ஆன்மா சாந்தி அடையட்டும் – குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல்

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.இவரது மறைவிற்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து ட்வீட் ஒன்றை  பதிவிட்டுள்ளார். திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும் அரசியல் வித்தகரும் திமுக பொதுச்செயலாளருமான திரு. கே. அன்பழகன் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் துயரமடைந்தேன். pic.twitter.com/W07vSUvp8b — Vice President of India (@VPSecretariat) March … Read more

#BREAKING :எதிர்க்கட்சி அமளியால் மாநிலங்களவை 11-ம் தேதி வரை ஒத்திவைப்பு..!

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கியது.இந்த கூட்டத்தொடர் வருகின்ற ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் டெல்லியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக இன்றும் மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மாநிலங்களவை வருகின்ற 11-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   

ஈஷாவில் களைக்கட்டிய மஹாசிவராத்திரி விழா.! சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர்.!

கோவை ஈஷா யோகா மையத்தில் 26-ம் ஆண்டு சிவராத்திரி விழா பிரமாண்டமாகவும், வெகு விமர்சியாகவும் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு கலந்துகொண்டார். கோவை ஈஷா யோகா மையத்தில் 26-ம் ஆண்டு சிவராத்திரி விழா மிக பிரமாண்டமாகவும் நடைபெற்றது. இதில் மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடு அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த நிலையில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் … Read more

தமிழகம் இல்லாமல் இந்தியா முழுமை பெறாது – வெங்கையா நாயுடு

சென்னையில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,தமிழகம் இல்லாமல் இந்தியா முழுமை பெறாது, தமிழர் என்பது பெருமை, இந்தியராகவும் பெருமை கொள்ளுங்கள்.வெவ்வேறு மொழிகள் பேசினாலும், வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்தாலும் இந்தியராக ஒன்றிணைவோம். குடும்ப முறை கலாச்சாரத்தை இன்றளவும் தமிழ்நாடு கடைபிடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.மொழி, கலாசாரம் ஆகியவற்றை மறந்து விடாதீர்கள்; அதே நேரம் மற்றவர்களின் நம்பிக்கையுடன் சண்டையிடாதீர்கள் என்று பேசினார்.

இந்தியாவில் 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன! அதற்கு யோசனை கூறும் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு!

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று டெல்லியில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி விரிவாக பேசினார். அதாவது, இந்தியாவில் இதுவரை 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதில் பல வழக்குகள் 50 ஆண்டுக்கும் மேலாக நிலுவையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், உச்சநீதிமன்றமானது, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் போன்ற இடங்களிலும் அதன் கிளைகளை நிறுவ வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இதன் … Read more

தமிழர்கள் முடிந்தவரை மற்ற மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்-வெங்கையா நாயுடு

தமிழ் கற்றுக்கொள்வதில் பெருமைப்பட வேண்டும்  என்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் அறக்கட்டளை சார்பாக நடைபெறும் விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்றார்.அப்பொழுது அவர் பேசுகையில்,வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு அறிவே முக்கியம்.இந்தியாவுக்குள் பலர் படை எடுத்தார்கள், செல்வத்தை சுரண்டினார்கள். தமிழராக பிறந்து தமிழ் கற்றுக்கொள்வதில் பெருமைப்பட வேண்டும். தொடக்கக்கல்வி தாய் மொழியில்தான் இருக்க வேண்டும் . தமிழர்கள் முடிந்தவரை மற்ற மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். சட்டமுறைகளை முறையாக பின்பற்றினால், பொருளாதாரத்தில் இந்தியா 3வது … Read more

‘ அவரது உடல் நிலை சீராக உள்ளது’ – அருண் ஜெட்லீயை பார்த்த பின்பு வெங்கையா நாயுடு பேட்டி!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லீயின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஏற்கனவே பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று அவர் நலம் பற்றி விசாரித்துவிட்டு சென்றனர். இதனை தொடர்ந்து, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லீயை நேரில் பார்த்துவிட்டு, மருத்துவர்களிடம் விசாரித்து வந்துள்ளார். அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ அருண் ஜெட்லீயின் உடல்நிலை நன்றாக இருக்கிறது. … Read more

மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ஜூன் 17 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வந்தது.தொடர்ந்து நடைபெற்ற மாநிலங்களவையில் பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.குறிப்பாக நேற்று முன்தினம் கூட காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மாநிலங்களவை கூடியது.அவை தொடங்கியதும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.இதன் பின்னர் பேசிய  மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா  நாயுடு,  நாடாளுமன்ற கூட்டத்தொடர் 17 ஆண்டுகளில் முதல்முறையாக சிறப்பாக நடந்துள்ளது.மாநிலங்களவையின் 35 அமர்வுகளில் 32 மசோதாக்கள் … Read more

மீண்டும் எமெர்ஜென்சி வைகோ ஆவேசம் இது அவசியமான நிலை என வெங்கயா நாயுடு

காஷ்மீரில் ஏற்பட்டு வரும் பதட்டமான சூழ்நிலையில் இன்று நாடுளுமன்றத்தில் முக்கிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது இது குறித்து தகவல் உள்த்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது அதன் படி மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா சிறப்பு அந்தஸ்துகள் வழங்கும் 370 மற்றும் 35 ஏ  சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுகிறது  என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து  மாநிலங்களவையில்  கடும் அமளி ஏற்பட்டது வைகோ ,திருச்சி சிவா உள்ளிட்டோர் தங்களது குரலை உயர்த்தி கூச்சலிட்டனர் .வெங்கையா நாய்டு இருக்கையில் சென்று … Read more

தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி – துணை குடியரசுத் தலைவர் பேச்சு !

தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று நாட்டின் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். தமிழ் மொழியானது உலக மொழிகளில் பழமையான மொழியாக தொன்று தொட்டு விளங்குவதாவும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் அனைவரும் அவர்களது தாய் மொழியை மறக்காமல் இருக்க வேண்டும் என்றும் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். அதே போல், தேவையில்லாமல் எந்த மொழியையும் திணிக்க கூடாது என்றும் எந்த மொழியையும் எதிர்க்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.