உ.பி சட்டப் பேரவைக்கான இறுதிக்கட்ட வாக்குப் பதிவு – 54.18% வாக்குகள் பதிவு!

உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. இதில் மணிப்பூரில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், சட்டப் பேரவைக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, இன்று … Read more

மகனால் நடந்த விபரீதம்., ரூ.36 லட்சத்தை இழந்த முன்னாள் ராணுவ வீரர்!

ஓய்வுபெற்ற இந்திய ராணுவ வீரர் ஒருவரின் மகன், சிங்கப்பூரில் உள்ள கேமிங் போர்ட்டலில் இருந்து கேமை பதிவிறக்கம் செய்து, கூடுதல் அம்சங்களைப் பெற ரூ.36 லட்சம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் விளையாட்டுக்கு அடிமையான மகன், இணையதளத்தில் கேமை பதிவிறக்கம் செய்ததால், அவரது தந்தையான ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவரின் கணக்கில் இருந்து ரூ.36 லட்சம் பிடித்தம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஆக்ராவில் உள்ள சைபர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த … Read more

வாரணாசி : இரண்டாவது நாளாக பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

வாரணாசியில் இரண்டாவது நாளாக பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றுள்ள நிலையில், நேற்று உத்தரபிரதேச மாநிலத்தை அடைந்ததும் அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் பிரதமரை வரவேற்றனர். அதன் பின் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு சென்றடைந்த பிரதமர் புண்ணிய நதியான கங்கையில் புனித நீராடி வழிபாடு நடத்தினார். இன்றும் பிரதமர் அம்மாநில முதல்வர் மற்றும் கட்சி … Read more

#BREAKING: வாரணாசி கால பைரவர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்..!

வாரணாசியில் உள்ள கால பைரவர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு வந்துள்ளார். உத்தரபிரதேசம் 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள கால பைரவர் கோயிலில் ஆரத்தி எடுத்து சாமி தரிசனம் செய்தார். இன்னும் சற்று நேரத்தில் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். சுமார் 339 கோடி செலவில் … Read more

இன்று பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் …!

காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி சிங் உபி பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ரேபலி பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ தான் அதிதி சிங். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் பல முறை கட்சிக்குள்ளேயே இவருக்கு கருத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அவர்களையும் அடிக்கடி விமர்சித்துள்ளார். காங்கிரசில் இருந்த போதும் பாஜகவுக்கு ஆதரவாக அவ்வப்போது குரல் கொடுத்து வந்த … Read more

இரண்டு நாள் பயணமாக உத்திரப்பிரதேசம் செல்கிறார்: குடியரசுத்தலைவர்..!

இரண்டு நாள் பயணமாக உத்திரப்பிரதேச பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த். குடியரசு மாளிகை அறிவித்துள்ள அறிவிப்பின்படி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள கான்பூருக்கு பயணம் செய்யவுள்ளார். இவர் நவம்பர் 24 ஆம் தேதி அன்று சௌத்ரி ஹர்மோகன் சிங் யாதவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் பங்கு கொள்ள உள்ளார். அவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார். மேலும், நவம்பர் 25 ஆம் தேதி அன்று ஹர்கோர்ட் பட்லர் … Read more

மொபைலில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுவர்கள் சரக்கு ரயில் மோதி உயிரிழப்பு …!

மொபைலில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுவர்கள் சரக்கு ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். உத்திரபிரதேசத்தில் உள்ள ஆக்ரா எனும் பகுதியில் வசித்து வரும் கவுரவ் குமார் மற்றும் கபில் குமார் எனும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த சிறுவர்கள் இருவரும் ஆன்லைன் விளையாட்டாகிய பப்ஜி விளையாடிக் கொண்டே வெளியில் சென்றிருந்த பொழுது சரக்கு ரயில் மீது மோதி பரிதாபமாக இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மதுராவிலிருந்து லட்சுமி நகர் செல்லும் தண்டவாள … Read more

மத்திய அரசு மத அரசியல் செய்கிறது; ஏழைகளை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை – கபில் சிபல்!

மத்திய அரசு மத அரசியல் செய்கிறது, அவர்களுக்கு ஏழைகளை பற்றி கவலை இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய கபில் சிபல் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் பாஜக தலைவர்கள் உண்மையான உலகத்தில் இல்லை எனவும், அதன் காரணமாகத்தான் ஏழைகளின் வருமானம் உயர்ந்து இருப்பதாக பாஜக கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு மாதத்திற்கு ஆறாயிரம் சம்பாதிக்க கூடிய ஒருவர், மாதம் இருபத்தைந்தாயிரம் … Read more

வகுப்பறையில் நடனமாடிய 5 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்…!

உத்தர பிரதேச மாநிலத்தில் வகுப்பறையில் நடனமாடிய 5 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா எனும் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் சிலர் வகுப்பறையில் மாணவர்கள் இல்லாத நேரத்தில் நடனமாடி அதை வீடியோவாக வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து இது தொடர்பாக கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். பின், நடனமாடிய ஐந்து ஆசிரியர்களை விசாரித்து, இது குறித்து விளக்கம் அளிக்குமாறு அந்த … Read more

12 பேர் உயிரிழப்பு – கொரோனாவும் இல்லை, டெங்குவும் இல்லை …!

கொரோனா வைரஸ் மற்றும் டெங்கு பாதிப்பு எதுவுமில்லாமலேயே உத்தர பிரதேச மாநிலத்தில் மர்மமான வைரஸ் தாக்குதலால் 12 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. இன்னும் கொரோனாவின் தாக்கமே குறையாத நிலையில் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் நிலையில், … Read more