இன்று தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார்.இதனால் மீண்டும் பதவியேற்ற பாஜகவின் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.இதில் கடந்த முறை அருண் ஜெட்லீ பதவி வகித்த நிதியமைச்சர் பதவி ,இந்த முறை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் … Read more

இன்று தாக்கல் செய்யப்படுகிறது பொருளாதார ஆய்வறிக்கை

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.இந்த முறை நிதி அமைச்சர்பதவி நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் முதல் பட்ஜெட் நாளை (ஜூலை 5ஆம் தேதி )தாக்கல் செய்யப்படுகிறது.இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்நிலையில்  இதற்கு முன்பாக இன்று பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படுகிறது. இதனையும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

நிதிநெருக்கடியில் பிஎஸ்என்எல் நிறுவனம்! மத்திய அரசு கைகொடுக்குமா?

பிஎஸ்என்எல் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிதி நெருக்கடியின் காரணமாக, அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் வேலையாட்களுக்கு ஜூன் மாத ஊதியத்தை கூட கொடுக்க முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த நிறுவனம் ஜூன் மாத ஊதியம் கொடுக்கவும், இந்நிறுவனம் தொடர்ந்து இயங்கவும் உடனடியாக 850 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய அரசிடம் கோரிக்கை  வைத்துள்ளது. மேலும், இந்நிறுவனம் தொடர்ந்து சீராக இயங்குவதற்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது. … Read more

மன்மோகன் சிங்கை சந்தித்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மன்மோகன் சிங்கை சந்தித்தார். காங்கிரஸ் ஆட்சிகாலத்தின் போது மத்திய நிதி அமைச்சராக மன்மோகன் சிங் பதவி வகித்தார்.17வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்நிலையில்  இன்று  நிர்மலா சீதாராமன் முன்னாள் பிரதமரும் ,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கை சந்தித்தார். இந்த சந்திப்பு டெல்லியில் உள்ள மன்மோகன் சிங்கின் இல்லத்தில் நடைபெற்றது.

ஜவுளித்துறைக்கு ஊக்க தொகை:பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு வழங்குவதாக ஸ்மிரிதி இரானி உறுதி அளித்துள்ளார்-அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

ஜவுளித்துறைக்கு ரூ.76 கோடி ஊக்க தொகை வழங்குவதாக ஸ்மிரிதி இரானி உறுதி அளித்துள்ளார் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். டெல்லியில்  அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மத்திய அமைச்சர் க ஸ்மிரிதி இரானியை சந்தித்தார்.இதன் பின்னர் அவர் கூறுகையில், தமிழக ஜவுளித்துறைக்கு ரூ.76 கோடி ஊக்க தொகை வழங்க கோரினோம்.பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு வழங்குவதாக ஸ்மிரிதி இரானி உறுதி அளித்துள்ளார். தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு வரலாம் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் தயாரிப்பது பெரும் சவாலாக இருக்கும் – நிதி அமைச்சர் கருத்து !

மத்திய அரசின் நிதி அமைச்சகம் சார்பில் நாட்டிற்கான மொத்த பட்ஜெட் தயாரிப்பது பெரும் சவாலாக இருக்கும் என்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். நிதி அமைச்சகம் சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் தயாரிப்பு நேற்று தொடங்கி தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை 5ம் தேதியன்று நாடாளுமன்ற அவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்பு  குறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், முந்தைய அமைச்சரவையில் பாதுகாப்பு துறையின் அமைச்சராக இருந்த பொழுது எதிர்கொண்ட சவால்களை … Read more

அல்வா குடுத்த அமைச்சர் நிர்மலா !…மத்திய பட்ஜெட் தயாரிப்பு தொடங்கியது !

மத்திய அரசின்  பட்ஜெட் தயாரிப்பிற்கு முன் நடக்கும் அல்வா குடுக்கும் நிகழ்வு புதுடில்லியில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் அல்வா வழங்கினார். ஒவ்வொரு வருடமும் மத்திய அரசின் நிதி பட்ஜெட் தயாரிக்கும் செய்யும் முன்பு அல்வா குடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது.இந்திய கலாச்சாரம் படி எந்த ஒரு நல்ல விஷயம் தொடங்கும் முன்பு இனிப்பு வழங்கப்படும்.அதே போல், இந்த முறை புதிய அமைச்சரவை சார்பில் வரும் … Read more

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் தொடக்கம்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.இந்த முறை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த நிலையில் டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது .தமிழகம் சார்பில் துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் பங்கேற்றுள்ளார்.

மீண்டும் பொறுப்பேற்ற மோடி அரசு !ஜூலை 5ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார்.இதனால் மீண்டும் பதவியேற்ற பாஜகவின் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.இதில் கடந்த முறை அருண் ஜெட்லீ பதவி வகித்த நிதியமைச்சர் பதவி ,இந்த முறை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் … Read more

17வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல்-பிரகாஷ் ஜவடேகர்

நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,17வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். ஜூலை 4 ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார் என்று தெரிவித்துள்ளார்.