17வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல்-பிரகாஷ் ஜவடேகர்

நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,17வது மக்களவையின் முதல் பட்ஜெட் ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
ஜூலை 4 ஆம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment