உக்ரைன் உணவகத்தில் திடீர் தாக்குதல்: இரண்டு பேர் உயிரிழந்தனர்!

ukraine

உக்ரைன் தெற்கு மைகோலேவ் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் ரஷ்ய ஏவுகணை ஒன்று தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்ததாக மைகோலேவ் கவர்னர் விட்டலி கிம், செய்தியார்களிடம் உறுதி செய்துள்ளார். நேற்று இரவு 8:30 மணிக்கு மைகோலேவ் குடியிருப்பு பகுதியில் உள்ள உணவு நிறுவனத்தை ரஷ்ய  ஏவுகணை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள் மொத்தமும் இடிந்துள்ளது. இதனையடுத்து, மீட்கும் பணிகள் தீவீரமாக நடைபெற்ற நிலையில், இந்த  இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த … Read more

சூப்பர் மார்க்கெட்டில் சீறிப்பாய்ந்த ராக்கெட்.. 51 பேர் உயிரிழப்பு..!

#Ukraine

உக்ரைனில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 51 பேர் பலியாகியுள்ளதாக அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனில்  கார்கிவ் பகுதியில் உள்ள ஹ்ரோசா கிராமத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஆறு வயது சிறுவனும் ஒருவர். மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 19 மாதங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பிறகு கார்கிவ்வில்  நடந்த மிக மோசமான தாக்குதல் இது … Read more

உக்ரைனுக்கு 1000 மெட்டல் டிடெக்டர்களை வழங்கும் பிரிட்டன்..!

உக்ரைனுக்கு கண்ணிவெடிகளை அகற்ற 1000 மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் செயலிழக்கச் செய்யும் 100 கருவிகளையும் பிரிட்டன் வழங்கியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போரானது ஒரு முடிவில்லாமல் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஏவுகணை தாக்குதல்கள் மூலம் பாதிப்படைந்த தங்களது சாலைகள் மற்றும் கட்டமைப்புகளை சீரமைக்கும் முயற்சியில் உக்ரைன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு உதவுவதற்காக 1000க்கும் மேற்பட்ட மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் கண்ணி வெடிகளை செயளிக்கச்செய்யும் 100 கருவிகளையும் பிரிட்டன் வழங்கியுள்ளது.கண்ணிவெடிகளை செயலிழக்கச்செய்யும் முயற்சிகளை பாதுகாப்பாக … Read more

உக்ரைன், மீது 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்.!

உக்ரைன் மீது ரஷ்யா, இன்று 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தகவல். ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகின்ற நிலையில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் இன்று காலை உக்ரைன் மீது ரஷ்யா, 100க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் முழுவதும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலிக்கப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் ஒலெக்ஸி அரெஸ்டோவிச், பேஸ்புக்கில் தெரிவித்தார். உக்ரைன் தலைநகர் கீவ், உட்பட பல நகரங்களில் … Read more

உக்ரைனின் கெர்சன் நகரின் மீது ஏவுகணை மழை பொழியும் ரஷ்யா.!

தெற்கு உக்ரைனில் அண்மையில் விடுவிக்கப்பட்ட கெர்சன் நகரின் மீது ரஷ்யப் படைகள் மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து அழுத்தத்தை பிரயோகித்து வருவதாகவும் ரஷ்யா 24 மணி நேரத்தில் கெர்சனில் உள்ள பொதுமக்களின் இருப்பிடங்களை  நோக்கி பல ராக்கெட் லாஞ்சர்களில் இருந்து 33 ஏவுகணைகளை ஏவியுள்ளதாக ராணுவம் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைனில் போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா விரும்புகிறது- புடின்

உக்ரைன் போர் முடிவுக்கு வர ரஷ்யா விரும்புவதாக அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். உக்ரைனில் மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதை இலக்காகக் கொண்டிருப்பதாகவும், சண்டை முடிந்தவரை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்றும் புடின் கூறியதாக தி சிட்னி மார்னிங் ஹெரால்ட் (SMH) தெரிவித்துள்ளது. “எங்கள் இலக்கு இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதுதான். இதற்காக நாங்கள் பாடுபடுகிறோம், தொடர்ந்து பாடுபடுவோம்,எனவே இவை அனைத்தும் முடிவடைவதை உறுதி செய்ய முயல்வோம், விரைவில் சிறப்பாக செயல்படுவோம்” என்று புடின் … Read more

போருக்கு பின் முதல் வெளிநாட்டுப்பயணம்! அமெரிக்கா செல்கிறார் ஜெலென்ஸ்கி.!

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, போருக்குப்பிறகு முதன்முறையாக வெளி நாட்டுப்பயணமாக அமெரிக்கா செல்லஇருப்பதாக தகவல். ரஷ்யா-உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி 2022 தொடங்கி கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவருகிறது. ரஷ்யாவால், உக்ரைனின் சில பகுதிகளில் மின்சார கட்டமைப்பு மீது குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் உக்ரைனில் மின்சாரமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் போருக்குப்பிறகு முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, வெளி நாட்டுப்பயணமாக அமெரிக்கா செல்லஇருப்பதாக … Read more

உக்ரைனில், ரஷ்யா ட்ரோன் தாக்குதல்! தகர்த்த உக்ரைன்.!

உக்ரைனில், ரஷ்யா இரவில் நடத்திய ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக உக்ரைன் தகர்த்துள்ளது.   உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று இரவில் 23 ட்ரோன்கள் மூலம் தன்னிச்சையாக வெடிக்கும் விமானங்களை அனுப்பி தாக்கியுள்ளது. இதில் 18 ட்ரோன் விமானங்களை சுட்டுத்தள்ளியதாக உக்ரைன் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த தாக்குதலில் சில அடுக்குமாடிக் கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பாக உக்ரைன் மீது ரஷ்யாவால் இதுவரை இல்லாத, ஒரேநாளில் 70 க்கும் மேற்பட்ட … Read more

உக்ரைன் மீது மீண்டும் தாக்குதல் நடத்த 2 லட்சம் புதிய வீரர்களை தயார்படுத்தும் ரஷ்யா- உக்ரைன் தகவல்

உக்ரைனின் கீவ் மீது மீண்டும் தாக்குதல் நடத்த 2 லட்சம் புதிய வீரர்களை ரஷ்யா தயார்படுத்துவதாக உக்ரைன் தகவல். உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்த  திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக 2 லட்சம் புதிய படை வீரர்களை ரஷ்யா தயார்படுத்துவதாகவும் உக்ரைனின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி வலேரி ஜலுஷ்னி எச்சரித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலுக்கு எத்தனை பீரங்கிகள், எவ்வளவு ஆயுதங்கள் தேவை என்று நாங்கள் அனைத்து கணக்கீடுகளையும் செய்துள்ளோம். தற்போதைய நிலை மற்றும் … Read more

உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அமெரிக்கா அளித்தால், அதுதான் முதல் இலக்கு- ரஷ்யா

அமெரிக்கா, உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அளித்தால், அதுதான் முதல் இலக்கு என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பேட்ரியாட் ஏவுகணைகளை வழங்கினால் அதுதான் ரஷ்யாவிற்கு முதன்மையான இலக்காக இருக்கும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேட்ரியாட் ஏவுகணைகள், அமெரிக்காவின் மிகவும் மேம்பட்ட வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் இந்த பேட்ரியாட் ஏவுகணைகள், கப்பல் ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை விடவும் மிகவும் மேம்பட்ட ஒன்றாகக் கருதப்படுகிறது. பேட்ரியாட் … Read more