உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அமெரிக்கா அளித்தால், அதுதான் முதல் இலக்கு- ரஷ்யா

அமெரிக்கா, உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அளித்தால், அதுதான் முதல் இலக்கு என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, பேட்ரியாட் ஏவுகணைகளை வழங்கினால் அதுதான் ரஷ்யாவிற்கு முதன்மையான இலக்காக இருக்கும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பேட்ரியாட் ஏவுகணைகள், அமெரிக்காவின் மிகவும் மேம்பட்ட வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மேலும் இந்த பேட்ரியாட் ஏவுகணைகள், கப்பல் ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை விடவும் மிகவும் மேம்பட்ட ஒன்றாகக் கருதப்படுகிறது. பேட்ரியாட் ஏவுகணைகளை, உக்ரைனுக்கு வழங்குவது தொடர்பான திட்டங்களை வாஷிங்டன் உறுதி செய்து வருவதாக தகவல் வெளியானதை அடுத்து ரஷ்யா, இவ்வாறு கூறியுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போரில் அமெரிக்கா மிகவும் தீவிரம் காட்டி வருகிறது, உக்ரைனுக்கு எதிரான இந்த தாக்குதல் நீண்டகாலமாக தொடர்வதற்கு அமெரிக்கா தான் காரணம் என்று ரஷ்யா தரப்பில் கூறப்படுகிறது. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா, உக்ரைனுக்கு $19.3 பில்லியன் இராணுவ உதவியை வழங்கியுள்ளது என ரஷ்யா கூறியுள்ளது.

author avatar
Muthu Kumar

Leave a Comment