உக்ரைன் போருக்கு இடையேயும் தனது மருத்துவ கல்வியை தொடரும் இந்திய மாணவர்கள்.! அமைச்சர் தகவல்.!

மருத்துவ கல்வியை தொடரும்  சுமார் 1,100 இந்திய மாணவர்கள் உக்ரைனில் உள்ளனர்.   ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போரானது நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியத்தூதரகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை வெளியேறுமாறு கூறியது. ஆனாலும் தற்பொழுது உக்ரைனில் இந்திய மாணவர்கள் பலர் மருத்துவக் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர். இதனையடுத்து அக்டோபர் மாதம் நடந்த லோக்சபா மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனகாஷி லேகி, போரினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டிலிருந்து இந்திய மாணவர்கள் வெளியேறுமாறு கிய்வில் … Read more

உக்ரைனின் முக்கிய நகரை கைப்பற்ற ரஷ்யா திட்டம்.! பிரிட்டன் உளவுத்துறை ‘ரகசிய’ எச்சரிக்கை.!

உக்ரைனின் பக்முட் பகுதியை ரஷ்யா கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கி இன்னும் போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் அவ்வப்போது  பதிலடி கொடுத்தாலும், ரஷ்யா அளவுக்கு அவர்களால் போரில் பதிலடி கொடுக்க முடியவில்லை என்பதே உண்மை. தற்போது ரஷ்யாவின் அடுத்த ரகசிய நகர்வு பற்றி பிரிட்டன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பக்முட் எனும் நகரை வடக்கு மற்றும் தெற்கில் … Read more

உக்ரைனுக்கு உதவும் அமெரிக்கா .. ! மின்சாதன உபகரணங்களை வாங்க 53 மில்லியன் டாலர் ஒதுக்கீடு..!

ரஷ்யாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு உதவும் வகையில் அமெரிக்கா 53 மில்லியன் டாலர்களை வழங்குகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே நடக்கும் போரில் ரஷ்யா உக்ரைனின் மின்சார கட்டமைப்பை குறிவைத்து தாக்கியது.ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து உக்ரைனின் மின்சாரக்கட்டமைப்பு பாதிக்கப்பட்டதைத்  தொடர்ந்து உக்ரைனின் பல பகுதிகளில் மின்சாரமின்றி தவித்து வருகின்றனர். இந்த தாக்குதலால் சேதமடைந்த மின் கட்டமைப்பை சரி செய்வதற்காக, அமெரிக்கா மின்சார உபகரணங்கள் வாங்குவதற்கு 53 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் 432 கோடி)  … Read more

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை மழை! இருளில் சூழ்ந்த உக்ரைன்.!

உக்ரைன்-ரஷ்யா போர் ஆரம்பித்து 9 மாதங்களில், ரஷ்யா ஒரேநாளில் 100 ஏவுகணைகளை உக்ரைன் மீது ஏவியுள்ளது. ரஷ்யப்படைகளால் 100 ஏவுகணைகள் உக்ரைன் மீது ஏவப்பட்டதாகவும், அவை பெரும்பாலும் உக்ரைனின் ஆற்றல் கட்டமைப்பின் மீது குறி வைத்து  ஏவப்பட்டதாகவும் உக்ரைன் தரப்பில் கூறப்பட்டது, மேலும் போர் தொடங்கி 9 மாதங்களில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என்று கூறப்பட்டது. உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறும்போது, இதன்மூலம் ரஷ்யாவிற்கு என்ன வேண்டும் என்பது தெரிகிறது, 85 ஏவுகணைகள் இதுவரை இங்கே … Read more

உடனே வெளியேறுங்கள்.! உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு மீண்டும் ஓர் உத்தரவு.! தூதரகம் அறிவிப்பு.!

உக்ரைன் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.  உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் ஏற்பட்டு தற்போது அது தீவிரமடைந்து வருகிறது . ஏற்கனவே ரஷ்யாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது . உக்ரைன் நாட்டு முக்கிய சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி அதனை ரஷ்யாவோடு இணைத்துவிட்டதாக அண்மையில் ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். இந்த விவகாரங்களை அடுத்து, உக்ரைனில் இருக்கும் … Read more

உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளில் ராணுவ சட்டம்.! ரஷ்ய அதிபர் புதின் அதிரடி நடவடிக்கை.!

உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளான டோனட்ஸ்க், லகான்ஸ்க், கெர்சன், சப்போரிசியா ஆகிய பகுதிகளில் ராணுவ சட்டத்தை ரஷ்ய அதிபர் புதின் அமல்படுத்தியுள்ளார்.  ரஷ்யா – உக்ரைன் நாட்டிற்கு இடையே போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட 8 மாதங்களாக தொடர்கிறது. இதில் ஆரம்பம் முதலே ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. இடையில் சிறுது மாதம் போர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மை காலமாக போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே, ரஷ்ய ராணுவம் உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளான டோனட்ஸ்க், லகான்ஸ்க், … Read more

Ukraine: மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்கிய ரஷ்யா; உக்ரேனில் நிலவும் கடுமையான மின் தட்டுப்பாடு

ரஷ்யா மின் உற்பத்தி நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ,இதனால் உக்ரேனில் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கி உள்ளதாகவும் பொதுமக்கள் மினசாரத்தை அளவாக கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துமாறு உக்ரேனிய எரிசக்தித் துறை  அதிகாரிகள் தெவித்துள்ளனர். மொத்த உள்கட்டமைப்பில் சுமார் 40 சதவீதம் உற்பத்தி திறன் கடுமையாக சேதமடைந்துள்ளன” மின்சாரம் வழங்குவதில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும், நாடு முழுவதும் மின்தடைகளை திட்டமிடுவதாகவும் தெரிவித்துள்னர். போர்க்களத்தில் உக்ரைனின் ஆயுதப் படைகளுடன் போட்டியிட … Read more

Plane crash : ரஷ்யாவில் ராணுவ விமானம் குடியிருப்பு கட்டிடத்தில் மோதியதில் 13 பேர் பலி

உக்ரைனுக்கு அருகிலுள்ள தென்மேற்கு ரஷ்யாவில் இராணுவ விமானம் விபத்தில் சிக்கியது 13 பேர் பலி . ரஷ்ய இராணுவ விமானநிலையத்தில் இருந்து எஸ்யூ-34 சூப்பர்சோனிக் போர்-போம்பர் ஜெட் என்ற பயிற்சி விமானத்தை இயக்கிய போது என்ஜினில் ஏற்பட்ட தீயினால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஏய்ஸ்க் நகரில் குடியிருப்பு கட்டிடம் மீது மோதியது. இந்த விபத்தில் விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட  13 பேர் உயிரிழந்ததாகவும்,68 பேர் காப்பாற்றப்பட்டுள்னர் ரஷ்ய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.விமானத்தில் இருந்த இரு … Read more

Ukraine-Russia War : கிய்வ் மீதான ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல்களுக்கு அமெரிக்கா கண்டனம்

திங்கட்கிழமை அதிகாலை கியேவில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரேன் தலைநகர் கீவில்  உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து ட்ரோன்கள் மூலம் ரஷ்யா இன்று காலை தாக்குதல் நடத்தியது, பொதுமக்கள் மற்றும் குடிமக்களின் உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதலுக்கு அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. உக்ரேனிய மக்களின் வலிமை மற்றும் நெகிழ்ச்சியை நாங்கள் பாராட்டுகிறோம். உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம் ட்வீட் செய்தது. More desperate and reprehensible Russian attacks this morning … Read more

Russia attacked: உக்ரைனின் கீவ் மீது “காமிகேஸ்” ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய ரஷ்யா

உக்ரேன் தலைநகர் கீவில்  உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதல். திங்கள்கிழமை காலை ரஷ்யா “காமிகேஸ்” ட்ரோன்கள் மூலம் கீவ் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரேனிய உயர் அதிகாரி வெளியிட்ட முதற்கட்ட  தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் ஜனாதிபதியின் தலைமைத் தளபதி ஆண்ட்ரி யெர்மக் கூறுகையில்,”இது அவர்களுக்கு உதவும் என்று ரஷ்யர்கள் நினைக்கிறார்கள், ஆனால் இந்த நடவடிக்கைகள் விரக்தியை ஏற்படுத்துகின்றன” என்று தெரிவித்துள்ளார். “எங்களுக்கு கூடிய விரைவில் வான் பாதுகாப்பு … Read more