உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளில் ராணுவ சட்டம்.! ரஷ்ய அதிபர் புதின் அதிரடி நடவடிக்கை.!

உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளான டோனட்ஸ்க், லகான்ஸ்க், கெர்சன், சப்போரிசியா ஆகிய பகுதிகளில் ராணுவ சட்டத்தை ரஷ்ய அதிபர் புதின் அமல்படுத்தியுள்ளார். 

ரஷ்யா – உக்ரைன் நாட்டிற்கு இடையே போர் ஆரம்பித்து கிட்டத்தட்ட 8 மாதங்களாக தொடர்கிறது. இதில் ஆரம்பம் முதலே ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது.

இடையில் சிறுது மாதம் போர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மை காலமாக போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே, ரஷ்ய ராணுவம் உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளான டோனட்ஸ்க், லகான்ஸ்க், கெர்சன், சப்போரிசியா ஆகிய பகுதிகளில் வாக்கெடுப்பு நடத்தியது.

இதனை தொடர்ந்து, இந்த 4 பிராந்திய உக்ரைன் பகுதிகளில் ராணுவ சட்டத்தை ரஷ்ய அதிபர் புதின் அமல்படுத்தியுள்ளார். மேலும் உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் பகுதியில் போரை தீவிரப்படுத்தபட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment