,

வானில் பறக்கும் நஷ்ரியா… உடன் பறக்கும் அந்த நபர் யார்.? வைரலாகும் புகைப்படங்கள் இதோ…

By

ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்த நஸ்ரியா, கடந்த 2014ஆம் ஆண்டில் பகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு சற்று விலகிவிட்டார் என்றே கூறலாம். பிறகு நடிகர் நானிக்கு ஜோடியாக அண்டே சுந்தரலிங்கி என்ற தெலுங்கு படம் மூலம் ரீ-எண்ட்ரீ கொடுத்தார்.

Nazriya Nazim Dubai Vacation Mode
Nazriya Nazim Dubai Vacation Mode [Image Source: Google]

இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றுவிட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நஸ்ரியா தான் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இதனால் ரசிகர்களும் அவருடைய அடுத்த படத்தின் அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்துள்ளனர்.

Nazriya Nazim Dubai Vacation Mode
Nazriya Nazim Dubai Vacation Mode [Image Source: Google]

எப்போதும் சமூகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நாயகிகளுள், நஸ்ரியாவும் ஒருவர். ஏதேனும் புகைப்படங்களை அடிக்கடி வெளியீட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் துபாய் சென்றுள்ள இவர், பயிற்சியாளருடன் ஸ்கை டைவிங் செய்துள்ளார். அதற்கான புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Nazriya Nazim Dubai Vacation Mode
Nazriya Nazim Dubai Vacation Mode [Image Source: Google]

இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், “விமானத்திலிருந்து குதித்து துபாயில் இறங்கினேன்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த சாகசம் செய்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், கனவு நிஜமாகியது என்றும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh)

Dinasuvadu Media @2023