கனமழை எச்சரிக்கை…இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளதன் காரணமாக இன்று (நவம்பர் 25 ஆம் தேதி) முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக … Read more

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து தொடர்பாக விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம்…!!

திருவாரூர் தொகுதியில் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த சூழலில் கஜா புயல் நிவாராணப் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்ததையடுத்து, திருவாரூர் ஆட்சியர் நிர்மல்ராஜ் நடத்திய கூட்டத்திலும் இதே கருத்து வலியுறுத்தின. இதனால் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்த  தலைமை தேர்தல் ஆணையம்  கஜா புயல் நிவாரணப் பணிகளை சுட்டிக்காட்டி இடைத்தேர்தலை ரத்து செய்யப்பட்டுள்ளதாக  தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது . கஜா புயல் பாதிப்புகள் இருப்பதால் … Read more

திருவாரூர் இடைத்தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் இன்று அறிவிப்பு…!!

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரின் பெயர் இன்று அறிவிக்கப்படுகிறது. திருவாரூர் தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன. இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தி.மு.க., அ.ம.மு.க. கட்சிகள் அறிவித்துள்ளன. தி.மு.க. சார்பில் பூண்டி கே. கலைவாணன் போட்டியிடுகிறார். இதேபோன்று அ.ம.மு.க. சார்பில் எஸ். காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் 54 பேர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர். இவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு … Read more

அதிமுக ஆட்சிமன்றக்குழு நாளை கூடுகிறது திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து முடிவு…!!

திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட பெறப்பட்டுள்ள விருப்ப மனுக்கள் குறித்து ஆலோசிக்க ஆட்சிமன்றக்குழு நாளை கூடுகிறது. தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருவாரூர் தொகுதி, அவரது மறைவுக்கு பின் காலியானது. அங்கு ஜனவரி 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுக நிர்வாகிகளிடம் ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. விண்ணப்பம் பெறப்பட்டவர்களிடம் நாளை அதிமுக தலைமை … Read more

அமமுக சார்பில் திருவாரூர் வேட்பாளர் அறிவிப்பு..!!

திருவாரூர் இடை தேர்தலில் அமமுக சார்பில் திருவாரூர் மாவட்ட அமமுக செயலாளர்  எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என்று TTV தினகரன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததை அடுத்து திருவாரூர் தொகுதி  காலியானது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.தற்போது ஜனவரி 28ம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது இந்நிலையில் அனைத்து கட்சிகளும் விருப்பமனு தாக்கல் செய்ய அறிவித்திருந்தனர்.குறிப்பாக திமுக மற்றும் அதிமுக அந்த கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் விரும்ப மனுவை … Read more

திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் வைப்பது என்பது அவசியம் இல்லை என்றும், இதனால் கஜா புயல் மறு சீரமைப்பு பணிகள் பாதிக்கப்படும் என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் முறையிட்டார். வழக்கு விவரங்கள் முழுமையாக தெரியாமல் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது என்று தலைமை … Read more

திருவாரூர் மாவட்டத்தில் விரைவில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்: அமைச்சர் காமராஜ்..!!

திருவாரூர் மாவட்டத்தில் புதிய தொழிற்பேட்டை விரைவில் அமைக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை முதலீட்டாளர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், உலக தொழில் முதலீட்டை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் 201 முதலீட்டாளர்களிடம் இருந்து 125 கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளது என்றார். திருவாரூர் மாவட்டத்தில் விரைவில் … Read more