திருவாரூர் மாவட்டத்தில் புதிய தொழிற்பேட்டை விரைவில் அமைக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை முதலீட்டாளர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், உலக தொழில் முதலீட்டை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் 201 முதலீட்டாளர்களிடம் இருந்து 125 கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளது என்றார். திருவாரூர் மாவட்டத்தில் விரைவில் தொழிற்பேட்டை அமைக்கப்படும் எனவும் அமைச்சர் காமராஜ் உறுதியளித்தார்.