விரைவில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.! வெளியான முக்கிய அறிவிப்பு.!

Vikkiravandi By Election 2024

Vikravandi : திமுக எம்எல்ஏ மறைவை அடுத்து, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் வேளைகள் மிக தீவிரமாக நடைபெற்று வந்த சூழலில், கடந்த சனிக்கிழமை அன்று விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ புகழேந்தி திடீரென உடல்நல குறைவால் காலமானார். அவர் இறப்பதற்கு முந்தைய நாள் வரையில் திமுக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி மறைவால் , அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டு … Read more

#BREAKING: கேரளா; திரிக்காகரை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி!

கேரள மாநிலம் திரிக்காகரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உமா தாஸ் வெற்றி. கேரள மாநிலம் திரிக்காகரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உமா தாஸ் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட உமா தாஸ் 72,770 வாக்குகள் பெற்று திரிக்காகரை இடைத்தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ளார். 2021 தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்கு வித்தியாசமான 14,329-ஐ விட தற்போது 10,687 வாக்குகளுக்கு மேல் கூடுதலாக பெற்றுள்ளார் உமா தாஸ். … Read more

#BREAKING: இடைத்தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்..!

மேற்கு வங்கம், சத்தீஸ்கர், பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெறவுள்ள  இடைத்தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மேற்கு வங்கத்தில் 2 தொகுதிகளுக்கும் , சத்தீஸ்கர், பீகார் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய  மாநிலங்களில் தலா 1 தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த அனைத்து இடங்களுக்கும் ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 24-ஆம் தேதி கடைசி நாளாகும். அதே சமயம், … Read more

இந்தியாவை பாகிஸ்தானாகவோ, தலிபானாகவோ விடமாட்டேன் -மம்தா பானர்ஜி..!

இந்தியாவை பாகிஸ்தான் மற்றும் தலிபான் ராஜ்ஜியம் உருவாக மேற்கு வங்கம் எப்போதும் அனுமதிக்காது” என மம்தா பானர்ஜி  கூறினார். சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். இருப்பினும், மேற்குவங்க முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்ற நிலையில், அவர் 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட வேண்டும். இதைதொடர்ந்து, மேற்கு வங்கத்தில் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு இம்மாத இறுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. … Read more

உ.பி இடைத்தேர்தல்: ஆர்வமுடன் வாக்களித்த 110 வயது மூதாட்டி!

உத்திரப்பிரதேச மாநில இடைத்தேர்தலை முன்னிட்டு 110 வயதான மூதாட்டி வாக்களித்துள்ளார் . உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள‌ 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை முதல் தொடங்கியது .அதில் பலர் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதில், உன்னாவ் மாவட்டம் பங்ரமாயு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் 110 வயது மூதாட்டி ஒருவர் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளார் .

#BreakingNews : தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை – தேர்தல் ஆணையம்

மிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் தற்போது இல்லை என்று  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.கொரோனா காரணமாக தேர்தலை நடத்த வேண்டாம் என தமிழக தலைமை செயலாளர் சார்பில் கடிதம் எழுதப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

#Breaking : இடைத்தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நாடு முழுவதும் காலியாக உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.குறிப்பாக தேர்தல் நடத்தப்படவில்லை. எனவே நாடு முழுவதும் காலியாக உள்ள தொகுதிகளுக்கு  தேர்தல் எப்போது?  என்று இந்திய தலைமை தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் ஆலோசனை  மேற்கொண்டனர் .ஆலோசனையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் மாநில தேர்தல் அதிகாரிகள் காணொளி  காட்சி மூலமாக … Read more

3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்பொழுது ? தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சேப்பாக்கம் எம்எல்ஏ, திருவொற்றியூர் எம்எல்ஏ, குடியாத்தம் எம்எல்ஏ ஆகிய மூவரும் சமீபத்தில் காலமானார்கள். இதனை அடுத்து இந்த மூன்று தொகுதிகளுக்கும் தேர்தல் எப்போது என்ற எதிர்பார்ப்பு அந்த மூன்று தொகுதி மக்களிடம் இருந்த நிலையில், இந்த இடைத்தேர்தல் குறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி, தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது … Read more

#2019 RECAP: நாங்குநேரி , விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தல்.!

கடந்த அக்டோபர் 21-ம் தேதி  நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இரண்டு தொகுதியிலும்  திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை வீழ்த்தி அதிமுக வேட்பாளர்கள் வெற்றி  பெற்றனர். கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு இடைத்தேர்தல் என அறிவித்தார்.பின்னர் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். செப்டம்பர் மாதம் 23-ம் தேதி வேட்புமனு தாக்கல் எனவும் ,வேட்புமனு தாக்கல் செய்ய … Read more

இடைத்தேர்தல்..! 150 ரவுடிகளை அழைத்து போலீசார் எச்சரிக்கை..!

கர்நாடகவில் உள்ள காங்கிரஸ் கட்சியை சார்ந்த 14 ,மதசார்பற்ற ஜனதாதன கட்சியை சார்ந்த 3 எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவாக செலயல்பட்டதால் எம்எல்ஏக்களை முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தார். இதைத்தொடர்ந்து 17 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது சரியே என தீர்ப்பு அளித்தது. மேலும் 2 பேரின் வெற்றி ஏற்கனவே செல்லாது என வழக்கு உள்ள நிலையில் மீதம் முள்ள … Read more