#BREAKING: டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – பிசிசிஐ

டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. 2022-ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டன் கேஎல் ராகுலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13-ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள … Read more

#AsiaCup2022: இந்திய அணியில் ஜடேஜா விலகல்..புதிய வீரர் சேர்ப்பு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா விலகல் என பிசிசிஐ அறிவிப்பு. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டிகள் துபாய் மற்றும் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் ஆகிய இரண்டு அணிகளுடன் விளையாடி வெற்றி பெற்று சூப்பர் … Read more

காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் 4ம் இடத்துக்கு முன்னேறிய இந்தியா!

காமன்வெல்த்தில் 20 தங்கம் பதக்கம் வென்று பதக்க பட்டியலில் 4-ஆவது இடத்துக்கு முன்னேறிய இந்தியா. 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், இந்திய வீரர்கள் அசத்தி வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்த நிலையில், காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் 4ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது இந்தியா. அதன்படி, இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த்தில் 20 … Read more

#WIvsIND: வெஸ்ட் இண்டீசை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்த இந்தியா!

ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தங்கள்  சொந்த மண்ணில் முதல் முறையாக ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்தது இந்தியா.  வெஸ்ட் இண்டீஸ்க்கு பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 3 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, 2-வது ஒரு நாள் போட்டியில், 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி … Read more

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரிலும் கே.எல்.ராகுல் இல்லை?

கே.எல்.ராகுலுக்கு இன்னும் அதிகமான ஓய்வு தேவை என்பதால், அவர் டி20 தொடரிலும் பங்கேற்கமாட்டார் என தகவல். வெஸ்ட் இண்டீஸ்-க்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுவிட்ட நிலையில், இன்று கடைசி ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் எதிராக இந்திய அணி  5 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதன்படி, இந்தியா, … Read more

#IndvsWI: ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா இந்தியா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…இன்று 3வது ஒருநாள் போட்டி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஒயிட் வாஷ் செய்யுமா இந்தியா. வெஸ்ட் இண்டீஸ்க்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது. … Read more

பாகிஸ்தான் அணியை முந்தி புதிய சாதனை படைத்த இந்திய அணி!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதன் மூலம் புதிய சாதனை படைத்த இந்திய அணி. வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 3 வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து, இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் … Read more

#BirminghamCommonwealth:ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் 16 பேர் கொண்ட இந்திய அணி – பிசிசிஐ அறிவிப்பு!

பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமானது (பிசிசிஐ) பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது.அதன்படி,இப்போட்டிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும்,ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில்,சர்வதேச மகளிர் டி20 போட்டி இடம்பெறுவது இதுவே முதல்முறை என்ற நிலையில், இந்தியா,ஆஸ்திரேலியா,பார்படாஸ்,பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன.அதேசமயம்,இலங்கை,இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா … Read more

#IREvIND:தீபக் ஹூடா காட்டடி – 4 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா!

இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில்,இந்தியா மற்றும் அயர்லாந்து (IRE vs IND) அணிகள் மோதும் முதல் T20 போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை டப்ளினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில் நடைபெற்றது.இந்த தொடரில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்கினார். இதனிடையே,போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது.இதனையடுத்து,களமிறங்கிய அயர்லாந்து அணி 12 ஓவரில் 4 … Read more

இதுவே முதல்முறை.. 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கோலிக்கு வந்த சோதனை!

5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதல் 2 இடங்களிலிருந்து விராட் கோலி வெளியேறினார். ஐசிசி இன்று சர்வதேச ஒருநாள் போட்டி பேட்டர்களுக்கான சமீபத்திய தரவரிசையை வெளியிட்டது. இதில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 811 ரேட்டிங்-யுடன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். 5 ஆண்டுகளில் முதல் முறையாக விராட் கோலி ஒருநாள் போட்டி பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 2 இடங்களை விட்டு வெளியேறுவது இதுவே முதல்முறை. சமீப காலமாக … Read more