ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம் – பெட்ரோல்,டீசல் விலை ஜிஎஸ்டிக்குள்?..!

ஜிஎஸ்டி விகிதங்கள் மாற்றப்பட்ட பொருட்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் ,லக்னோவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அதன்படி,தமிழகம் சார்பில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்,வணிக வரித்துறை செயலாளர் பங்கேற்றனர். நாட்டில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, 2019-ல் கடைசியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேரடியாக நடைபெற்ற நிலையில், கிட்டத்தட்ட … Read more

குளிர்பானங்களுக்கு ரூ.4.5 ஜிஎஸ்டி விதித்ததால் ஸ்விக்கி நிறுவனத்திற்கு ரூ.20,000 அபராதம்..!

பஞ்சகுலா என்ற பகுதியில் 3 குளிர்பான பாட்டில்களுக்கு ரூ.4.5 ரூபாய் ஜிஎஸ்டி விதித்த காரணத்தால் ஸ்விக்கி நிறுவனத்திற்கு மாவட்ட நுகர்வோர் தகராறு நிவாரண ஆணையம் ரூ.20,000 அபராதம் விதித்துள்ளது. கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி ஹரியானாவில் உள்ள பஞ்சகுலா பகுதியில் வசிக்கும் அபிஷேக் கார்க் என்பவர் ஸ்விக்கி ஆப்பிலிருந்து உணவுபொருட்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்துள்ளார். அதில் அவர் சீஸி பூண்டு குச்சிகள், 500 மி.லி கொக்கோகோலாவில் 3 பாட்டில்கள் வாங்கியுள்ளார். இந்த … Read more

#BREAKING: முழு ஊரடங்கில் Swiggy, Zomato சேவைக்கு மட்டும் அனுமதி.!

தமிழகத்தில் முழு ஊரடங்கில் Swiggy, Zomato சேவைக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி அதிகாலை 4 மணி வரை இரவு ஊரடங்கு அமல்ப்படுப்படுகிறது. மேலும், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் … Read more

சாலையோர உணவு விரும்பும் வடிக்கையாளர்களுக்காக ஸ்விக்கி அறிவித்துள்ள புதிய சலுகை!

சாலையோர உணவு விரும்பும் வடிக்கையாளர்களுக்காக ஸ்விக்கி அறிவித்துள்ள புதிய சலுகை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதைய நவீன காலகட்டத்தில் மக்களும் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றனர். வீட்டில் சமைத்து சாப்பிட கூடிய காலம் போய் தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐந்தே நிமிடத்தில் வாங்கி சாப்பிடக் கூடிய காலம் வந்துவிட்டது. இந்நிலையில் பிரபலமான ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி இந்தியா முழுவதிலும் பல்வேறு உணவு வகைகளை ஆன்லைன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் சாலையோர உணவகங்களில் விரும்பக்கூடிய … Read more

குறைவான ஊதியத்தை எதிர்த்து நொய்டாவில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

குறைவான ஊதியத்தை எதிர்த்து நொய்டாவில் ஸ்விக்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். தற்பொழுதைய காலத்தில் வீட்டில் சமைக்கப்படக் கூடிய உணவை விட ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்கி உண்ணக் கூடிய உணவுகள் தான் அதிக அளவில் பிரபலமாகி உள்ளது. அதிலும் கேட்ட நேரத்தில் உடனடியாக கொண்டு வந்து கொடுக்க கூடிய ஊழியர்கள் மழையோ வெயிலோ எதையும் பாராமல் மக்களுக்காக உழைக்கின்றனர். அவர்களும் தங்கள் குடும்பத்தினருக்காகவும் ஊதியத்தை நம்பியும் தான் இவ்வளவு தூரம் உழைக்கின்றனர். இந்நிலையில், … Read more

பேரிடரில் வாழ்வாதாரம் சூறையாடப்படுவது வேதனை – மு.க ஸ்டாலின் அறிக்கை.!

ஸ்விகி ஊழியர்கள் சந்தித்து தங்களது ஊதியம் குறைக்கப்பட்டதையும், அதற்காகப் போராடும் தங்களது நிலையையும் என்னிடம் நேரில் கூறி வருந்தினர் – முக ஸ்டாலின் இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இன்று ஸ்விகி (swiggy) உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் என்னை சந்தித்தார்கள். தங்களின் ஊதியத்தையும், ஊக்க தொகையையும் நிறுவனம் குறைந்திருப்பதாகவும், போராடிய 10000க்கும் மேற்பட்ட ஊழியர்களின் மன உளைச்சளையும் வெளிப்படுத்தினார்கள். மேலும், பேரிடர் காலத்தில் அனைவரின் வாழ்வாதாரம் சூறையாடப்படுவது வேதனையாக … Read more

ஆன்லைன் வணிக உணவு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான்

தனியார் ஆன்லைன் வணிக உணவு வழங்கல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் அறிக்கை. தனியார் ஆன்லைன் வணிக உணவு வழங்கல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியுள்ளார் அதில் கூறுகையில், சென்னை போன்ற பெருமாநகரங்களில் தொலைபேசி மற்றும் இணையவழி வணிகம் மூலம் உணவு வேண்டுவோரின் இடங்களுக்கு நேரில் சென்று உணவு வழங்கும் முறைமை தற்காலத்தில் பெருகி வருகிறது. தகவல் தொழில்நுட்பத்தில் மேம்பட்டுள்ள … Read more

கொரோனா ஊரடங்கில் 5.5 லட்சம் பிரியாணி பார்சல்கள் டெலிவரி – ஸ்விக்கி நிறுவனம்

கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் 5.5 லட்சம் பிரியாணி பார்சல்கள் டெலிவரி . இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த  நிலையில்,கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், வீடுகளில் இருந்த மக்களில், பெரும்பாலானோர் இணையத்தில் உணவுகளை ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டனர். இந்நிலையில், இந்தியாவில் பிரபலமான ஆன்லைன் நிறுவனமான ஸ்விக்கி, கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் 5.5 லட்சம் பிரியாணி பார்சல்கள் டெலிவரி செயப்பட்டதாக கூறியுள்ளது. மேலும், 1.29 லட்சம் சாக்கோ … Read more

மதுபானங்கள் இனி வீட்டிற்கே வந்துவிடும்! ஸ்விக்கி நிறுவனத்தின் அதிரடியான சேவை!

வீடுகளுக்கே மதுபானத்தை கொண்டு சேர்க்கும் ஸ்விக்கி நிறுவனம். கொரோனா வைரஸின் தீவிர பரவலால் இந்தியா முழுவதும்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நான்காம் கட்டமாக மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு சில மாநிலங்களை தாவிர மற்ற மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தில், ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி … Read more

1,100 பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் ஸ்விகி ஆன்லைன் நிறுவனம்!

1,100 பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் ஸ்விகி ஆன்லைன் நிறுவனம். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலால், ஊரடங்கு உத்தரவு பிராபிக்கப்பட்டுள்ளது. இதனால், அணைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டது. இந்நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  வெளியிடப்பட்ட தளர்வுகளை தாண்டியும் தொழிற்துறை இயல்புநிலைக்குத் திரும்பவில்லை. தொழில் நிறுவனங்கள் சரிவை சந்தித்து வருவதையடுத்து, பல தொழில் நிறுவனங்களில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான … Read more