உச்ச நீதிமன்றம் அதிரடி !திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது இனி கட்டாயம் இல்லை….

நாடு முழுவதும் திரையரங்குகளில், படம் தொடங்குவதற்கு முன் தேசியகீதம் இசைக்கப்பட வேண்டுமென்றும், அப்போது திரையில் தேசியக்கொடி தோன்ற வேண்டும் என்றும் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட இயலாதவர்கள் எழுந்து நிற்க முடியுமா என்று கேட்கப்பட்டதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசு, குழு ஒன்றை உடனடியாக அமைத்து, விதிகளை உருவாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்து, விதிகளை உருவாக்க வேண்டும் என்பதால், குறைந்தபட்சம் 6 மாத … Read more

சிகரெட் பாக்கெட்டில் எச்சரிக்கை படம்-உச்சநீதிமன்றம் மறுப்பு

  சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் புகையிலை பொருட்களின் மீது, அச்சடிக்கப்படும் எச்சரிக்கை படம் குறித்த ஆந்திரா நீதிமன்ற உத்தரவிற்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுத்துள்ளது. கடந்த, 2014ல், புகையிலை பொருள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் மீது, 85 சதவீதம், எச்சரிக்கை படம் இடம் பெற வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், சிகரெட் பாக்கெட் மற்றும் புகையிலை பொருட்களின் மீது, 85 சதவீதத்திற்கு பதில், 40 சதவீத அளவு எச்சரிக்கை படம் இடம் பெறலாம் என, … Read more

ஆதாரை பயன்படுத்தி சிம் கார்ட் வழங்க ஏர்டெல்லுக்கு இடைக்கால தடை விதித்தது மத்திய அரசு

ஆதாரை பயன்படுத்தி சிம் கார்ட் வழங்க ஏர்டெல்லுக்கு இடைக்கால தடை விதித்தது மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் சிம் கார்டுக்கு அளிக்கப்பட்ட ஆதார் தகவலை பயன்படுத்தி ஏர்டெல் பேமெண்ட் வங்கி கணக்கு தொடங்கியதால் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நடவடிக்கை எடுத்ததாகவும் கூறுகிறது மத்திய அரசு.. ஆனால் அம்பானியின் ஜியோ இம்மாதிரியான முறையில் தான் வாடிக்கையாளரிடம் இருந்து ஆதார் தகவல்களை பெற்றுக்கொண்டு சிம் கார்ட்களை வழங்கின என்பதும் குறிப்பிடத்தக்கது.  

நீட் தேர்வு: நாடு முழுவதும் ஒரே கேள்வித்தாள் நீதிமன்றத்தில் எழுதிகொடுத்த சிபிஎஸ்இ…!

அடுத்தாண்டு முதல் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே கேள்வித்தாள் வழங்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான கேள்வி தாள்களை வழங்கியதோடு ,மட்டுமில்லாது தேர்வு அறைக்கு செல்ல உடை,அணிகலன் என பல கட்டுபாடுகளை விதித்தது சர்ச்சைக்குரிய செயலாகவும் இருந்தது. மேலும் இது அடித்தட்டு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும் என பல எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக முற்போக்கு அமைப்புகள் போராட்டம் நடத்தின.பல வழிகளில் … Read more

பொங்கலுக்கு மீண்டு(ம்) சீறி வருகிறது ஜல்லிகட்டு

இந்த வருடம் ஜல்லிகட்டு நடத்த தமிழகம் முழுவதும் மாணவர்களின் மாபெரும் போராட்டதுக்குபிறகு  தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து, இந்த வருடம் ஜல்லிகட்டு வெகு கோலாகலமாக நடைபெற்றது. இதனை எதிர்த்து, பீட்டா அமைப்பும், விலங்குகள் நலவாரிய அமைப்பும் உச்சீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதன் இறுதிகட்ட விசாரணை இன்று நடைபெற்றது. இதில் ஜல்லிகட்டுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவிதித்துள்ளது. தமிழக அரசு விதித்த ஜல்லிகட்டு அனுமதி சட்டத்தை தடை செய்ய பீட்டா அமைப்ப்புக்கும், விலங்குகள் அமைப்புக்கும் … Read more

ஜல்லிக்கட்டு இறுதி விசாரணை தொடங்கியது

ஜல்லிகட்டுக்கு எதிராக விலங்குகள் நலவாரிய அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதன் விசாரணை தொடர்ந்து வரும் நிலையில் இன்று அதன் இறுதிகட்ட விசாரணை நீதிபதி முன்பு தொடர்ந்தது. ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தமிழகம் சார்பில் முகுல் ரோகத்தி, ராஜேஷ் திவேதி, சேகர் நப்தே ஆகியோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு ஆஜராகினர்.

ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட வேண்டும் :உச்சநீதிமன்றத்தில் பிஜேபி மனு

ஒருவர் இரு தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது – பாஜக செய்தி தொடர்பாளர் அஷ்வினி உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார் .இந்நிலையில் அவரது மனுவானது உச்சநீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. மனு மீதான விசாரணையில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 31ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிப்பு : ஆதார், பான்

வங்கிகணக்குடன் ஆதார் நம்பர், பான் நம்பர் இவற்றை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என மத்திய அரசாங்கம் அறிவித்து இருந்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ஆதார் எண், பான் நம்பர், இணைக்க மார்ச் 31ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில் 139 சேவைகளை பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைக்க காலஅவகாசம் நீட்டிக்க முடிவு செய்து இருப்பதாகவும் முறைப்படி அறிவிப்பாணை வெளியிடப்படும் எனக்கூறியுள்ளது.

மொத்தம் 11 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் : தமிழகம் உள்பட…

உச்சநீதிமன்றமானது, மறுமணம் மற்றும் அது தொடர்பாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டது. அதில் செயல்படாத அரசுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கைவிடப்பட்ட விதவைகளின் நலனுக்கும் மறுவாழ்வுக்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்காத தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மறுமணத்துக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி நீதிமன்றம் ஆய்வு செய்தது. இந்நிலையில் செயல்படாத அரசுக்கு தலா 2 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

லவ்ஜிஹாத்…என்று கூறி ஹாதியாவின் சுதந்திரத்தை பறிக்கும் நீதித்துறை\.

கேரளாவை சேர்ந்த மத மாற்று திருமணம் செய்த ஹாதியா – ஷபின் ஜகான் திருமணத்தை ரத்து செய்தது கேரள உயர் நீதிமன்றம்.  ரத்துக்கு ஆதாரமாக உயர்நீதிமன்றம் கூறியதுதான் பெரும் அதிர்ச்சி. அதுதான் லவ் ஜிகாத். கேரளா உயர் நீதிமன்றத்தின் இந்த அநீதி உத்தரவை தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஹாதியா தாக்கல் செய்த மனுவின் விசாரணை சற்று ஆறுதல் அளிக்கிறது. “சேலத்திற்கு சென்று தனது ஹோமியோபதி படிப்பை தொடர அனுமதி அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்”. ஒரு இந்திய குடிமகள் என்கிற முறையில் ஹாதியாவுக்கு … Read more